Home /News /sports /

இந்த மாதிரி ரூல்ஸ் இருந்தா சச்சின் டெண்டுல்கர் 1 லட்சம் ரன் அடித்திருப்பார்- அக்தர்

இந்த மாதிரி ரூல்ஸ் இருந்தா சச்சின் டெண்டுல்கர் 1 லட்சம் ரன் அடித்திருப்பார்- அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

கிரிக்கெட்டின் தற்போதைய விதிகளை கடுமையாக சாடினார், இது பேட்டர்களுக்கு அதிக சாதகங்களை அளிக்கிறது தற்போதைய சகாப்தத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆடியிருந்தார் என்றால் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார் என்று ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கிரிக்கெட்டின் தற்போதைய விதிகளை கடுமையாக சாடினார், இது பேட்டர்களுக்கு அதிக சாதகங்களை அளிக்கிறது தற்போதைய சகாப்தத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆடியிருந்தார் என்றால் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார் என்று ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் கூறினார்.

    முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் தனது யூடியூப் சேனலில் பேசிய அக்தர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக சாடினார். இப்போது மூன்று ரிவியூக்களை அனுமதிக்கிறார்கள் சச்சின் காலத்தில் மூன்று ரிவியூக்கள் வைத்திருந்தால், அவர் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார்!"

    அக்தர் டெண்டுல்கரை ஒரு 'கடினமான பேட்ஸ்மேன்' என்று அழைத்தார், அவர் விளையாட்டு வரலாற்றில் சில சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சகாப்தத்தில் ஆடினார் என்கிறார் அக்தர்.

    "நான் அவருக்கு உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். சச்சின் மீது நான் பரிதாபப்படுவதற்கு காரணம், அவர் ஆரம்பத்தில் வாசிம் (அக்ரம்) மற்றும் வக்கார் (யூனிஸ்) ஆகியோருக்கு எதிராக விளையாடினார், அவர் ஷேன் வார்னுக்கு எதிராக விளையாடினார், பின்னர் அவர் (பிரெட்) லீ மற்றும் ஷோயப் (அக்தர்) ஆகியோரை எதிர்கொண்டார், பின்னர் அவர் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார். அதனால்தான் நான் அவரை மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று அழைக்கிறேன்” என்றார் அக்தர்.

    அக்தர்தான் பாவம்! சச்சின் டெண்டுல்கர் மே.இ.தீவுகளின் கடினமான வால்ஷ், ஆம்புரோஸ், ஆகியோரையும், இயன் பிஷப்பையும் ஆடியதோடு, தென் ஆப்பிரிக்காவின் பயங்கரமான ஆலன் டொனால்ட், கிறிஸ் பிரிங்கிள், ஃபானி டிவில்லியர்ஸ், மேக்மில்லன், மகாயா நிடினி, ஷான் போலாக், டேல் ஸ்டெய்ன் வரை ஆடிவிட்டார்.

    இப்போதெல்லாம் பேட்டிங் சார்ந்த கிரிக்கெட்தான் ஆடப்படுகிறது. முன்னதாக, ஒரு பேட்ஸ்மேனாக, வேகப்பந்து வீச்சாளர்கள் முடியை பறக்கவிட்டு, பந்துவீச்சு பவுன்சர்களுடன் உங்களை அணுகுவதை நீங்கள் ரசிப்பீர்கள்," என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறினார்.

    அதே உரையாடலில், சமநிலையை மீட்டெடுக்கவும், விளையாட்டை மேலும் உற்சாகப்படுத்தவும் சாஸ்திரியும் ஒரு தனித்துவமான ஆலோசனையைக் கொண்டு வந்தார்.

    “நீங்கள் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்றால், ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தக் கூடாது. அவற்றை அதிகரிக்கவும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அது உற்சாகத்தை அதிகரிக்கும்” என்றார் சாஸ்திரி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ravi Shastri, Sachin tendulkar

    அடுத்த செய்தி