ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்காக மருத்துவரின் அறிவுரையையும் மீறி கிரிக்கெட் விளையாடும் சச்சின்!

ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்காக மருத்துவரின் அறிவுரையையும் மீறி கிரிக்கெட் விளையாடும் சச்சின்!
சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
ஆஸ்திரேலிய வீராங்கனையின் கோரிக்கையை ஏற்று சச்சின் டெண்டுல்கர் மெல்பர்னில் நாளை கிரிக்கெட் விளையாட உள்ளார்.

ஆஸ்திரேலிய காட்டுத் தீ-க்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு க கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டி மெல்பர்னில் நாளை நடைபெற உள்ளது. இதில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியின் பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.

இந்தப் போட்டி நடக்கும் அதே மைதானத்தில் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் போட்டி இடைவேளையின் போது சச்சின் ஒரு ஓவர் விளையாட வேண்டும் என்றும், இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.



ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரியின் இந்த கோரிக்கைக்கு சச்சினும் உடனே இசைவு தெரிவித்துள்ளார். சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக விளையாட கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி எல்லிஸ் பெர்ரி வீசும் ஒரு ஓவருக்கு பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார்.

 
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading