• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கர் காலமானார்!

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கர் காலமானார்!

பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கர் உடன் சச்சின் டெண்டுல்கர். (Getty Images)

பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கர் உடன் சச்சின் டெண்டுல்கர். (Getty Images)

#RamakantAchrekar Passes Away | சச்சின் டெண்டுல்கரை உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிறுவயதில் பயிற்சி அளித்த ஸ்ரீ ராமகாந்த் அச்ரேக்கர் (87) மும்பையில் காலமானார்.

    1932-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீ ராமகாந்த் அச்ரேக்கர், மும்பையில் நடந்த பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பலர் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கரை உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

    Ramakant Achrekar, சச்சின் டெண்டுல்கர், Sachin Tendulkar
    சிறு வயது சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி உடன் ராமகாந்த் அச்ரேக்கர். (Getty Images)


    சச்சின் தவிர, வினோத் காம்ப்ளி, அஜித் அகார்கர் உள்ளிட்ட பலரை சிறந்த வீரர்களாக ராமகாந்த் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று சச்சின் டெண்டுல்கர், ராமகாந்த் அச்ரேக்கரை நேரில் சென்று பார்த்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    Ramakant Achrekar, சச்சின் டெண்டுல்கர், Sachin Tendulkar
    சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி உடன் ராமகாந்த் அச்ரேக்கர். (Twitter)


    ராமகாந்த் அச்ரேக்கரின் சாதனையைப் பாராட்டி, 1990-ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையின் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 2010-ல் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த ஸ்ரீ ராமகாந்த் அச்ரேக்கர் வயது மூப்பின் காரணமாக காலமனார். இவரது மறைவிற்கு பிசிசிஐ அமைப்பு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.



    அதேபோல், பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.





    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: