• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விவிஎஸ் லக்ஷ்மனின் சுயசரிதையை வெளியிட்ட சச்சின்!

விவிஎஸ் லக்ஷ்மனின் சுயசரிதையை வெளியிட்ட சச்சின்!

லக்ஷ்மனின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட சச்சின் (PTI)

லக்ஷ்மனின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட சச்சின் (PTI)

Sachin Unveils Laxman's Autobiography 281 and Beyond | டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் அடித்த தனது மறக்கமுடியாத இன்னிங்சை சுயசரிதையின் பெயராக லக்ஷ்மன் வைத்துள்ளார். #VVSLaxman

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மனின் ‘281 அண்ட் பியாண்ட்’ சுயசரிதை புத்தகத்தை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ். லக்ஷ்மன், ‘281 அண்ட் பியாண்ட்’ என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் அடித்த தனது மறக்கமுடியாத இன்னிங்சை சுயசரிதையின் பெயராக வைத்துள்ளார்.

VVS Laxman Autobiography
லக்ஷ்மனின் சுயசரிதையை வெளியிட்ட சச்சின் (PTI)


மும்பையில் நடைபெற்ற விழாவில் விவிஎஸ் லக்ஷ்மனின் சுயசரிதையை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது சச்சின் மற்றும் லக்ஷ்மன் ஆகிய இருவரும் கடந்த கால நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

VVS Laxman, Sachin
சுயசரிதை வெளியீட்டு விழாவில் சிரித்து பேசும் லக்ஷ்மன் & சச்சின் (வலது)


தோனி குறித்தும் சில சுவாரஸ்யமான நினைவுகளை இந்த சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 100-வது போட்டியின்போது அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்தை நாக்பூரில் இருந்து ஹோட்டல் வரை தோனி தனக்காக ஓட்டியதாக அவர் கூறியுள்ளார். இதுதவிர, சச்சின், ஷேவாக், டிராவிட் உள்ளிட்ட தன்னுடன் விளையாடிய வீரர்கள் குறித்தும் மறக்க முடியாத பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: