ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி... ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக சச்சின்

ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், ஷேன் வார்னே தலைமையிலான அணியும் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி... ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக சச்சின்
சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சி அளிக்க உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசமாகியும் 48 கோடி விலங்குகள் அழிந்துள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈட்டுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையிலும் நிவாரண நிதி திரட்டும் நோக்கிலும் வருகிற பிப்ரவரி 8ம் தேதி அன்று புஷ்பயர் பேஷ் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.


Also Read : நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிகார் தவான் விலகல்..?

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், ஷேன் வார்னே தலைமையிலான அணியும் இந்த போட்டியில் விளையாட உள்ளது. ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கருக்கும் ஷேன் வார்னே அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் வால்ஷ் பயிற்சி அளிக்க உள்ளனர்.

மேலும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading