Home /News /sports /

இப்படிப்பட்ட மனிதர்களால்தான் உலகமே அழகாக இருக்கிறது- கான்ஸ்டபிளுக்கு சச்சின் நெகிழ்ச்சி நன்றி

இப்படிப்பட்ட மனிதர்களால்தான் உலகமே அழகாக இருக்கிறது- கான்ஸ்டபிளுக்கு சச்சின் நெகிழ்ச்சி நன்றி

சச்சின்

சச்சின்

அடுத்தவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டு நம் உயிரைப் பாதுகாத்துக் கொள்வது மதிப்பாகாது” என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.

    தன்னுடைய தோழியைக் காப்பாற்றிய போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்து தன் மனிதார்த்தப் பக்கத்தை திறந்து காட்டியுள்ளார்.

    “சில நாட்களுக்கு முன்பாக நெருங்கிய தோழி விபத்தில் சிக்கினார். கடவுள் அருளால் அவர் இப்போது நன்றாக தேறி வருகிறார். ஆனால் அவர் பிழைத்ததற்கு போலீஸின் காலம் தவறாத உதவிதான் காரணம்” என்று அவருக்கு தன் டிவிட்டரில் நன்றி தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.

    விபத்து நடந்த உடனே இந்த கான்ஸ்டபிள் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கடுமையாக காயமடைந்த அவரது முதுகுத்தண்டுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கச் செய்தார். அந்த கான்ஸ்டபிளை நேரில் சந்தித்து நான் நன்றி கூறினேன். அவரைப்போலவே நம்மில் பலர் இருக்கின்றனர், கடமையின் அழைப்புக்கப்பாலும் மனிதகுலத்துக்கு பணியாற்றுபவர்கள் இவர்கள்.

    இவர்களை எங்காவது நீங்களும் பார்க்கக் கூடும் உடனே அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மக்கள் வாழ்க்கையில் வித்தியாசம் ஏற்படுத்துபவர்கள். இந்தியாவில் இருக்கும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கும் சொல்கிறேன், டிராபிக் விதிமுறைகளை மதிப்போம். குறுக்கு வழிகளை நாட வேண்டாம்.

    Also Read: ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா

    அடுத்தவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டு நம் உயிரைப் பாதுகாத்துக் கொள்வது மதிப்பாகாது” என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்:



    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசி யாரும் எளிதில் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது,.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sachin tendulkar

    அடுத்த செய்தி