• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த முன்னாள் ஜாம்பவான்கள்!

பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த முன்னாள் ஜாம்பவான்கள்!

கங்குலி, லக்‌ஷ்மன், சச்சின் (PTI)

கங்குலி, லக்‌ஷ்மன், சச்சின் (PTI)

Sachin, Sourav, Laxman say NO to CoA's request | புதிய பயிற்சியாளருக்கான தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. #BCCIWomen

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான தேர்வை நடத்துமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை முன்னாள் ஜாம்பவான்கள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த துஷார் ஆரோத் பதவி விலகியதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ரமேஷ் பவார் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பவார் (40), ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டியின்போது மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தனர்.

Ramesh Powar, Mithali Raj, BCCI
பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


பல்வேறு புகார்களுக்கு இடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் முடிந்தது. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி உள்ளிட்டோரின் பெயர்கள் பயிற்சியாளர் பதவிக்காக வரிசையில் இருக்கிறது.

Harmanpreet Kaur, Ramesh Pawor
ஹர்மன்ப்ரீத் கவுர் (இடது), ரமேஷ் பவார்


கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் உள்ள முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ். லக்‌ஷ்மன் ஆகியோரை, மகளிர் அணியின் பயிற்சியாளருக்கான தேர்வை நடத்துமாறு பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து கூட்டாக கடிதம் எழுதியுள்ள முன்னாள் ஜாம்பவான்கள், தங்களால் பயிற்சியாளர் தேர்வில் பங்கேற்க இயலாது என்று கூறியுள்ளனர்.

புதிய பயிற்சியாளருக்கான தேர்வு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவகலத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது, எப்படி பயிற்சியாளரைத் தேர்வு செய்வது என பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.

Also Watch...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: