கால்பந்து ரசிகர்களுக்கு ஃபிஃபா உலகக் கோப்பை திருவிழா தற்போது புதிய கொண்டாட்டத்தை தந்துள்ளது. உலக அளவில் அதிக படியான மக்கள் கால்பந்தை விரும்பி பார்த்து வருகின்றனர். கால்பந்து ரசிகர்களுக்கு உலக கோப்பை கால்பந்து வந்தவுடனே பெரும் கொண்டாட்டமும் தொடங்கி விட்டது. அதே போன்று, இந்த போட்டியில் பங்கேற்கும் தங்களுக்குப் பிடித்த அணிகளைப் போற்றும் இந்திய ரசிகர்களிடையே இந்த கொண்டாட்டம் எந்த அளவுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் விளையாடிய கால்பந்து விளையாட்டின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது மிக சிறந்த கால்பந்து திறமையை வெளிக்காட்டி உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வைரல் வீடியோவில், சச்சின் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கால்பந்து விளையாடுவதைக் காணலாம். மேலும், இதில் நீல நிற டி-சர்ட் மற்றும் ஷார்ட் அணிந்துள்ளார். இவர் முழு ஆர்வத்துடன் கால்பந்தைச் சுற்றி ஓடும்போது, இவரது புதிதாக வெளிப்பட்ட திறமையைப் பாராட்டுவதை இவரது ரசிகர்களால் நிறுத்த முடியவில்லை. சச்சினின் இந்த திறமையை பார்த்த ரசிகர்கள் 'புதிய கால்பந்து கடவுளா?' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
தற்போது நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை 2022 கால்பந்து விளையாட்டை குறிக்கும் வகையில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. மேலும், இந்த பதிவில் "கால்பந்து என் மனதில் உள்ளது" என்ற தலைப்பை குறிப்பிட்டு எழுதியுள்ளார். இதுவரை இந்த வீடியோவை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலர் சச்சினை பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர், "கிரிக்கெட் கடவுள் ஒரு கால்பந்து கடவுளாகவும் இருக்க முயற்சி செய்கிறார்" என்று கமெண்ட் செய்துள்ளார்.
Also Read : சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
இதற்கு இன்னொருவர், 'ஆம், கிரிக்கெட் வீரர் சச்சினின் கால்பந்து திறமையால் நெட்டிசன்கள் ஈர்க்கப்பட்டனர்" என்று பதில் தந்துள்ளார். இதே போன்று மற்றொரு பயனர், "கிரிக்கெட்டின் கடவுள்" என்று பதிலளித்தார். மூன்றாவது நபர், "இந்த ஜெர்சி பழைய சஹாரா பயிற்சி நாட்களை நினைவுபடுத்துவதாக” கமெண்ட் செய்துள்ளார். மேலும் பலர் சச்சினின் ஃபிட்னஸ் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவிற்கு முன்னதாக, கோல்ஃப் உடையில் மைதானத்தின் மத்தியில் கோல்ஃப் பேட்டை வைத்திருக்கும் படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார். தனது பல திறமைகளால் தனது எல்லைகளை எவ்வாறு சச்சின் விரிவுபடுத்துகிறார் என்பதை இது உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல், சச்சின் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உணவு மீது கொண்டுள்ள காதலையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கடந்த மாதம், ஜெய்ப்பூர் லஸ்ஸி மற்றும் வடா பாவ் பற்றி இவர் பதிவிட்ட பதிவுகள் சச்சின் எவ்வளவு பெரிய உணவு பிரியர் என்பதையும் காட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sachin tendulkar, Trends, Viral