வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் சச்சின்... அரிய வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்...!

இந்த பயிற்சி வெளிநாடு போட்டிகளின் போது பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை சுலபாமாக எதிர்கொள்ள முடியும்.

வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் சச்சின்... அரிய வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்...!
சச்சின் டெண்டுல்கர்
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2019, 3:28 PM IST
  • Share this:
வலைப்பயிற்சியில் நீர் தேங்கிய இடத்தில் வெறித்தனமாக பேட்டிங் செய்யும் வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை யாராலும் மிக எளிதில் மறந்து விட முடியாது. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசி உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் விளையாடிய வீரர், அதிக சதம் அடித்த வீரர் என்று இவர் சாதனையை அடுக்கி கொண்டே போகலாம். கிரிக்கெட் சச்சின் இந்த சாதனையை படைக்க பல தடைகளை கடந்து உள்ளார்.


1994-ம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச போராடினேன் என்று அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். அதன்பின் தொடர்ந்து தொடக்க வீரராக சச்சின் களமிறங்கினார்.

Also Read : ’ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கெஞ்சி போராட வேண்டியிருந்தது'- சச்சின் சுவாரஸ்யத் தகவல் 

தற்போது தனது ட்விட்டர் பக்கதில் #FlashbackFriday என்ற ஹஸ்டேகுடன் அரிய வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நீர் தேங்கிய இடத்தில் பேட்டிங் சச்சின் பயிற்சி செய்கிறார். குறைந்த இடைவெளியில் இருந்து பந்து எறியப்படுகிறது. பவுன்சர்களாக வரும் பந்துகளை சச்சின் லாவகமாக எதிர்கொள்கிறார். இந்த பயிற்சி வெளிநாடு போட்டிகளின் போது பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை சுலபாமாக எதிர்கொள்ள முடியும்.


மேலும் அந்த பதிவில் “கிரிக்கெட் மீது உள்ள ஆர்வமும் காதலும் புதுபுது முறையில் பயிற்சிகளை மேற்கொள் தூண்டும். நாம் என்ன செய்கிறோமோ அதனை விரும்பி செய்ய வேண்டும்“ என்று சச்சின் பதிவிட்டுள்ளார்.

Also Watch

First published: September 28, 2019, 3:28 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading