தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரண்டு பாகங்களாக உருவாக்கும் அந்த திரைப்படத்தில் இரண்டு காலகட்டங்களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் தற்கால காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து வரலாற்று பின்னணியில் உருவாகும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நேற்று மும்பையில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். திட்டமிடாமல் நடந்த அந்த சந்திப்பின் போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலானது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில் ட்வீட் செய்திருக்கிறார். அதில், ‘இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, சூர்யாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என ட்வீட் செய்திருக்கிறார்.
இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது 😃. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, @Suriya_offl. மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/LYrKeBZHEl
— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2023
நடிகர் சூர்யா கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். அவர் சச்சின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Indian cricket team, Sachin tendulkar, Suriya