ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரோட்டோரக் கடையில் சூடா ஒரு டீ.. ரசிகர்களுடன் செல்ஃபி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்!

ரோட்டோரக் கடையில் சூடா ஒரு டீ.. ரசிகர்களுடன் செல்ஃபி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்!

ரசிகருடன் செல்பி எடுத்த சச்சின்

ரசிகருடன் செல்பி எடுத்த சச்சின்

பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் சாலையோர தனது ரசிகர் வைத்திருந்த கடையில் நின்று டீ குடித்து விட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  கிரிக்கெட் என்றால் உடனே நினைவுக்கு வருவது சச்சின் தான் என்று கூறும் அளவிற்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவரது ரசிகர்கள் அவரை கடவுள் போல வழிபட்டு வருகின்றனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும், அவரது சாதனைகள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன.‌

  தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார். இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார்.

  இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்டியா.! நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு..!

  அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published: