’ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கெஞ்சி போராட வேண்டியிருந்தது'- சச்சின் சுவாரஸ்யத் தகவல்

’ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கெஞ்சி போராட வேண்டியிருந்தது'- சச்சின் சுவாரஸ்யத் தகவல்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 6:25 PM IST
  • Share this:
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க மிகவும் கெஞ்சினேன் என ஜாம்பவான் டெண்டுல்கர் 1994ம் ஆண்டு நடந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை யாராலும் மிக எளிதில் மறந்து விட முடியாது. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசி உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் விளையாடிய வீரர், அதிக சதம் அடித்த வீரர் என்று இவர் சாதனையை அடுக்கி கொண்டே போகலாம். டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடும் சச்சின், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க வீரர் களமிறங்கி எதிரணியை நடுங்க விடுவார்.


ஆனால் தொடக்க வீரராக களமிறங்க சச்சின் எதிர்கொண்ட சவால்களை தற்போது வெளிப்படுத்தி உள்ளார். 1994-ம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்ததாக கூறினார்.

மேலும் “அந்தப் போட்டியில் நேரடியாக தொடக்க வீரராக களமிறங்க நினைத்தேன். ஆனால் வாய்ப்பிற்காக கெஞ்ச வேண்டியதாக இருந்ததது. இந்த முறை தோற்றுவிட்டால் மீண்டும் ஒரு முறை உங்களிடம் வரமாட்டேன் என்றேன். நான் அந்த போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தேன். இதனால் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று நான் கேட்க வேண்டியதில்லை. அதன்பின் தொடர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடினேன். தோல்வியைக் கண்டு யாரும் பயப்படாதீர்கள்“ என்றார்.

தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் முதல் 5 போட்டிகளில் 82, 63, 40, 63, 70 ரன்கள் எடுத்தார். 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் 18,426 ரன்கள் குவித்துள்ளார்.

Loading...

Also Watch

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com