• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் டெண்டுல்கரும், மறக்க முடியாத நவம்பர் 15-ம்!

சச்சின் டெண்டுல்கரும், மறக்க முடியாத நவம்பர் 15-ம்!

சச்சின் டெண்டுல்கர் (Twitter/Sachin Tendulkar)

சச்சின் டெண்டுல்கர் (Twitter/Sachin Tendulkar)

1989-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி, கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதேயான சிறுவன் சச்சின், இந்திய அணிக்காக அறிமுகமானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிரிக்கெட் சகாப்தம் தொடங்கிய மற்றும் முடிந்த நாளான நவம்பர் 15-ம் தேதி கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நாளாக இருக்கிறது.

சாதனை நாயகன், ‘God of Cricket’ சச்சின் டெண்டுகர், 29 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறக்கிய நாள் இன்று. 1989-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி, கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதேயான சிறுவன் சச்சின், இந்திய அணிக்காக அறிமுகமானார். இந்த மும்பை சிறுவன் கிரிக்கெட் உலகை ஆட்டுவிப்பான் என அப்போது யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் உள்ளிட்டோரை மிகச்சிறு வயதில் அவர் எதிர்கொண்டார். தட்டுத்தடுமாறிய சச்சின் அந்த டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் 15 மட்டுமே.

சச்சின் டெண்டுல்கர் (Twitter/Sachin Tendulkar)


அறிமுகப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களுக்கு பயந்த அன்றைய சச்சின், பின்னாளில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை மறக்கவும் முடியாது... மறுக்கவும் முடியாது...

சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட் அரங்கில் சுழன்றடித்த சச்சின் ஏராளமான சாதனைகளைப் படைத்தார். 100 சதங்களை அடித்து இளம் வீரர்களுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தார். 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் வீரரும் சச்சின் தான். சச்சின், சொந்த மண்ணில் விடைபெற வேண்டும் என்பதற்காகவே, பிசிசிஐ 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான டெஸ்ட் தொடரை மும்பையில் நடத்த ஏற்பாடு செய்தது.



200-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில், கடைசி இன்னிங்க்ஸில் சச்சின் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது, ஒட்டுமொத்த வான்கடே மைதானமே எழுந்து நின்று கைதட்டி வழியனுப்பியது.

சச்சின் டெண்டுல்கர் (Twitter/Sachin Tendulkar)


24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்த நாள் அதே நவம்பர் 15-ம் தேதியான இன்று தான். இன்றைய தினம், சச்சினுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத காலச்சுவடாகவே உள்ளது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: