கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது அவரது குடும்பத்துடன் உற்சாகமாக செலவழித்து வந்த விடுமுறை நாட்களைப் பகிர்ந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். ரசிகர்கள் அதை அதிகம் விரும்பி வருகின்றனர். அதன்படி அவரது சமீபத்திய இன்ஸ்டா பதிவுகளில் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. ஆம், மாஸ்டர் பிளாஸ்டரின் அந்தக் கடி ஜோக் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டுள்ளது.
டெண்டுல்கர் தனது மகள் சாராவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதில் கிரிக்கெட் ஜாம்பவானான அவரும் அவரது மகள் சாராவும் ஸ்டைலான சன்கிளாஸ் மற்றும் லைஃப் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்திருந்தனர். மேலும், அந்த பதிவில் புகைப்படத்தோடு, அவர் ஒரு கடி ஜோக்கையும் வெளியிட்டிருந்தார். அதற்காக அவரை நெட்டிசன்கள் அவரை "King of Dad jokes" என்று அழைத்து வருகின்றனர். அப்படி என்ன நகைசுவை என்று தெரியுமா, "Sara: Baba are we lost at sea?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாஸ்டர்,"I'm not shore!" எனப் பதிலளித்துள்ளார்.
இன்ஸ்டாவில் இந்த பதிவு 1,241,572 லைக்குகளையும் 2,260 கருத்துகளையும் பெற்றுள்ளது. சமீபகாலமாக சச்சின் தனது குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலின் நடுவே சச்சின் பாராசைலிங் (Parasailing) செய்வது போன்ற வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவுடன் இந்தியில் புகழ்பெற்ற பாடகரான ரிட்விட்ஸ் (Ritvitz) பாடிய பாடலின் வரிகளை பதிவின் தலைப்பில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, சைக்கிளிங் செய்யும் வீடியோ, கோல்ஃப் விளையாடும் வீடியோ, நீச்சல் குளத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஆகியவற்றைப் பதிவிட்டிருந்தார். மேலும் தனது மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார். அந்தப் பதிவிற்கு வெகேஷன் வைப்ஸ் என தலைப்பிட்டிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்து முன்னணி வகிக்கும் வீரர். அவரது சர்வதேச வாழ்க்கையில், எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், மொத்தமாக 18,426 ரன்களைக் குவித்துள்ளார். கிரிக்கெட்டில் தன் திறமையால் சச்சின் 15,921 ரன்கள் எடுத்து காட் ஆப் கிரிக்கெட் என அனைவராலும் போற்றப்படுகிறார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்