உலகக் கோப்பை வெற்றியின் முடிவுக்கு சச்சின் தேர்வு செய்துள்ள உலக அணியில் 5 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை.
ஐ.சி.சி உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஐசிசி உலக அணியை அறிவித்திருந்தது. அந்த அணியில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மாவும், பும்ராவும் இடம் பிடித்திருந்தனர். கேன் வில்லியம்சன் கேப்டனாக இருந்தார்.
Also Read : ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்!
இதேப் போன்று சச்சின் தனது உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணிக்கு கேன் வில்லியம்சன் தான் கேப்டனாக உள்ளார்.
சச்சின் தேர்வு செய்த அணி
1. ரோஹித் சர்மா (இந்தியா)
2. ஜானி பேரிஸ்டோ (விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து)
3. கேன் வில்லியம்சன் (கேப்டன்) (நியூசிலாந்து)
4. விராட் கோலி (இந்தியா)
5. சஹிப்-அல்-ஹசன் (வங்கதேசம்)
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
7.ஹர்டிக் பாண்டியா (இந்தியா)
8. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
10. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
11. சோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
Also Read : ‘பவுண்டரி முறை’ ஐசிசியை வறுத்தெடுத்த அமிதாப் பச்சன், யுவ்ராஜ் சிங்!
Also Watch
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.