விராட் கோலியின் பதற்றத்தினால் கால்கள் நகரவில்லை- ஜீனியஸ் சச்சினின் துல்லியக் கணிப்பு

விராட் கோலி.

இங்கிலாந்தில் விராட் கோலி தனது பேட்டிங் கோளாறுகளை மறைத்துக் கொள்ள கேப்டன்சியில் களத்தில் சேட்டைகள் செய்து வருகிறார். உண்மையில் அவரது பேட்டிங்கில் என்ன பிரச்னை என்பதை லிட்டில் மாஸ்டர், ஜீனியஸ் சச்சின் டெண்டுல்கர் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்தில் விராட் கோலி தனது பேட்டிங் கோளாறுகளை மறைத்துக் கொள்ள கேப்டன்சியில் களத்தில் சேட்டைகள் செய்து வருகிறார். உண்மையில் அவரது பேட்டிங்கில் என்ன பிரச்னை என்பதை லிட்டில் மாஸ்டர், ஜீனியஸ் சச்சின் டெண்டுல்கர் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

    ஒன்று விராட் கோலி உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். பேட்டிங் பயிற்சியில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை, தன் பிரச்னை என்னவென்பதே அவருக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றே தெரிகிறது.

    2 டெஸ்ட் போட்டிகளில் 0,42, 20 என்பதே கோலியின் ஸ்கோர், லார்ட்ஸ் வெற்றி கோலியின் வெற்றியல்ல, பவுலர்களின் வெற்றி, பவுலர்களின் பேட்டிங் வெற்றி பவுலர்களின் பவுலிங் வெற்றி, இந்திய ஊடகங்கள் எதற்கெடுத்தாலும் இவர் பெயரைச் சொல்லி பழக்கப்பட்டு விட்டது, நாளை பார்சிலோனா அணி பிரான்ஸ் செயிண்ட் ஜெர்மனை வென்றால் கூட 'இட் இஸ் கோலி’ஸ் டச்' என்று போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இதெல்லாம் கிரிக்கெட்டை தாண்டிய வணிக நலன் சார்ந்த பிராண்ட் இமேஜ் பில்ட் அப். தொலைக்காட்சி சேனல்களும் எதிரணி சிக்ஸ் அடித்தால் அடித்த பேட்ஸ்மெனைக் காட்டாமல் கோலியை காட்டுகின்றனர். இப்படியாக கோலியைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டு விட்டனர்.

    இப்படியே போனால் அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பேட்டிங்கே ஆடாமல் வெறும் கேப்டன்சியினாலேயே அணியில் இருந்த மைக் பிரியர்லி போல் ‘நான்’, பிளேயிங் கேப்டன் என்பதிலிருந்து non-playing கேப்டன் ஆகி விடுவார் கோலி.

    சரி, சச்சின் டெண்டுல்கர் கோலி பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

    இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்களை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர், 32 டெஸ்ட்களில் 2,535 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து இருஅணிகளுக்கும் டாப் வீரராக இருக்கிறார்.


    விராட் கோலி சரியாகத் தொடங்குவதில்லை, இந்த மனநிலையினால் உத்திரீதியான தவறுகளைச் செய்கிறார். ஆரம்பம் சரியில்லை என்றால் நிறைய விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். பதற்றங்கள் அதிகம் இருந்தால் கால் நகர்வுகளை அதிகம் செய்வதன் மூலம் ஈடுகட்டப் பார்ப்போம். இதுதான் கோலிக்கு நடக்கிறது.

    பார்மில் இல்லாத பேட்ஸ்மென் என்ன செய்வார் என்றால் ஒன்று லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு ஓடி வந்து அதீத கிராஸ் செய்வார். அல்லது கால்களை நகர்த்தவே மாட்டார். இது அனைவருக்கும் ஏற்படக்கூடியதுதான். பார்ம் என்பது நம் மனநிலை மற்றும் மனத்துடன் சேர்ந்து உடலும் இயைபுடன் ஊடாடி ஏற்படும் ஒன்றாகும்.

    இவ்வாறு கூறுகிறார் சச்சின் டெண்டுல்கர்.
    Published by:Muthukumar
    First published: