• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் லெவலே வேற... - சொல்கிறார் முன்னாள் வேகப்புயல்

சச்சின் லெவலே வேற... - சொல்கிறார் முன்னாள் வேகப்புயல்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பந்து வீச கடினமாக அமைந்த 3 பேட்ஸ்மென்கள் பற்றி தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்புயல் ஆலன் டொனால்டு மனம் திறந்துள்ளார்.

  • Share this:
    தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பந்து வீச கடினமாக அமைந்த 3 பேட்ஸ்மென்கள் பற்றி தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்புயல் ஆலன் டொனால்டு மனம் திறந்துள்ளார்.

    அவருக்கு எப்போதும் சச்சின் டெண்டுல்கரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஒருமுறை ஆட்டமிழந்த பந்தில் மீண்டும் அவரை எடுக்க முடியாது என்று அவர் ஒருமுறை கூறினார். ஒருமுறை இன்ஸ்விங்கரில் சச்சின் எல்.பி.ஆனால் டொனால்டிடம், ஆனால் அடுத்த முறை டொனால்டினால் அவரை எல்.பி. ஆக்க முடியவில்லை. இதுதான் சச்சின் என்கிறார் டொனால்டு.

    ஆலன் டொனால்டு.


    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 1,161 ரன்களைக் குவித்து சராசரியாக 46 ரன்கள் வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 1,453 ரன்கள் சேர்த்து, 38 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

    இயன் சாப்பல் கூறுவது போல் சச்சின், ரிச்சர்ட்ஸ், லாரா போன்றவர்களையெல்லாம் அவுட் செய்து விட வேண்டும் நிற்க வைத்து அவர்களை கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் இயலாத காரியம் என்று கூறியிருந்தார், அதனை வழிமொழிகிறார் ஆலன் டொனால்டு.

    இந்நிலையில் அவர் கூறியதாவது:

    நான் 3 பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசச் சிரமப்பட்டேன் என்று சந்தேகமில்லாமல் கூறுவேன். 3 பேட்ஸ்மேன்களும் 3 விதங்களில் நெருக்கடி கொடுப்பார்கள். டெக்னிக்கல் ரீதியாக சிறந்த பேட்ஸ்மேனான சச்சினுக்குத்தான் பந்துவீசுவது மிகக்கடினம். நான் சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே பந்துவீசச் சிரமப்பட்ட முதல் பேட்ஸ்மேன் சச்சின்தான்.ஏனென்றால், தென் ஆப்பிரிக்காவில் சச்சின் பேட்டிங் செய்ய பயன்படுத்திய உத்திகளை இந்தியஅணியில் வேறு யாரும் அப்போது பயன்படுத்தியதில்லை.

    சச்சின் டெண்டுல்கர்


    நாங்கள் வீசும் பந்துகளை தாமதமாகத்தான் விளையாடி, தாமதமாகவே பந்தை லீவ் செய்வார். சச்சின் கிரீஸில் ஒருமணிநேரம் நிலைத்து நின்று 20 அல்லது 30 ரன்கள்சேர்த்துவிட்டால், அது எதிரணிக்கு ஆபத்தாக முடியும், அன்று முழுவதும் சச்சின் பேட் செய்வார். டெக்னிக்கலாக பேட்செய்வதில் சச்சின்தான் நம்பர் ஒன்.

    2-வதாக மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆடுகளமாக இருந்தாலும், பந்தை நிதானமாகக் கணித்து தடுத்து ஆடுவார். நான் சில போட்டிகளில்தான் லாராவுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். லாராவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் அவர் மிகவும் ஆவேசமாக ஆடத் தொடங்கிவிடுவார்.

    லாராவின் சில ஷாட்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். வளைந்து நெளிந்து, பின்பக்கம் குதித்து லாரா பேட் செய்யும்போது சிரிப்பு வரும். நம்ப முடியாத வேகத்தில் கால்களையும், கைகளையும் நகர்த்தி ஆடக்கூடியவர் லாரா. லென்த்தின் பந்து பட்டு லெக்சைடில் ஒதுங்கினால் அது பவுண்டரியில்தான் இருக்கும். நான் சந்தித்த புத்திசாலியான பேட்ஸ்மேன் லாரா.

    பிரையன் லாரா


    கடினமான மற்றும் எதிர்த்து நிற்கும் பேட்ஸ்மேன், பல நேரங்களில் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியவர் ஸ்டீவ் வாஹ். மிகப்பெரிய வியப்புக்குரிய வகையில் ஸ்டீவ் வாஹ் ஏதும் பேட் செய்தது இல்லை.

    ஸ்டீவ் வாஹ்.


    இதை நான் சொல்லும்போது ஸ்டீவ் என்னை மன்னிப்பார் என நம்புகிேறன். ஆனால் அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது அதில் சிறப்பாக ஆடும் மன வலிமை கொண்டவர் ஸ்டீவ் வாஹ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: