Home /News /sports /

நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவிற்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்...! அடையாளம் காட்டிய சச்சின்

நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவிற்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்...! அடையாளம் காட்டிய சச்சின்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

நியூசிலாந்து மைதானத்தில் ரோஹித் சர்மா எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவால் குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எடுத்துரைத்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், டி20 தொடரிலிருந்து ஷிகர் தவான் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களாக டி20 போட்டிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு ப்ரிதிவ் ஷா தேர்வாகி உள்ளனர். நியூசிலாந்தில் விளையாட உள்ள ரோஹித் சர்மாவிற்கு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளார் என்று சச்சின் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

Also Read : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றேன் - இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் பரபரப்பு பேட்டி

அதில், “ரோஹித் சர்மா நியூசிலாந்தில் 50 ஒவர் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி உள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்போது தான் தொடக்க வீரராக விளையாட உள்ளார். நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஓபனிங் விளையாடுவது சிரமான ஒன்று.

இந்தியாவில் அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் நியூசிலாந்து ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் வேறு. ஆடுகளத்தில் அதிகமான புல் இருந்தால் அதை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, Rohit sharma, Sachin tendulkar

அடுத்த செய்தி