முகப்பு /செய்தி /விளையாட்டு / கொரோனா பாசிட்டிவ்: சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

கொரோனா பாசிட்டிவ்: சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

மார்ச் 27ம் தேதி இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று தெரியவந்தது. இதனையடுத்து 6 நாட்கள் சென்ற பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

மார்ச் 27ம் தேதி இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று தெரியவந்தது. இதனையடுத்து 6 நாட்கள் சென்ற பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவப் பரிந்துரையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 2011 உலகக்கோப்பையை வென்ற தினம். அதை குறிப்பாக நினைவில் கொண்ட சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் 10 ஆம் ஆண்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினத்துக்கான வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் ஆசிகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி. மருத்துவ அறிவுரை காரணமாக ஏகப்பட்ட முன்னெச்சரிக்கைகளுடன் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் நலமாக வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ரோடு சேப்டி தொடரை சச்சின் அணியான இந்தியா லெஜண்ட்ஸ் வென்ற பிறகு சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத், இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் அனைவருக்கும் கோவிட் 19 பாசிட்டிவ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இத்தனை ரிஸ்க் எடுத்து ஐபிஎல் தொடரை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சச்சின் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

First published: