Home /News /sports /

‘எங்களை விட்டு இத்தனை விரைவில் போய்விட்டீர்களே வார்னி!’- ஷேன் வார்ன் பிறந்த நாளில் சச்சின் உருக்கம்

‘எங்களை விட்டு இத்தனை விரைவில் போய்விட்டீர்களே வார்னி!’- ஷேன் வார்ன் பிறந்த நாளில் சச்சின் உருக்கம்

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே

களத்தில் ஷேன் வார்னின் எதிரியும் வெளியில் மிகச்சிறந்த நண்பருமான சச்சின் டெண்டுல்கர், மறைந்த ஸ்பின் மேதை ஷேன் வார்னின் 53வது பிறந்ததினமான இன்று தன் சமூக ஊடகப்பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
களத்தில் ஷேன் வார்னின் எதிரியும் வெளியில் மிகச்சிறந்த நண்பருமான சச்சின் டெண்டுல்கர், மறைந்த ஸ்பின் மேதை ஷேன் வார்னின் 53வது பிறந்ததினமான இன்று தன் சமூக ஊடகப்பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஷேன் வார்னும் சச்சின் டெண்டுல்கரும் களத்தில் ஆடும்போதே இருவரும் பேசிக்கொண்டே தான் ஆடுவார்கள், அதுவும் பிட்சில் பந்து என்னவாகிறது, போன பந்து எப்படி, இதை எப்படி இப்படி ஆடினீர்கள் சச்சின் என்று வார்ன் கேட்பது அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்து நெகிழ்ந்த தருணங்கள் ரசிகர்களிடத்தில் பசுமையாகவே இருக்கும்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. இவர் 1969 செப்டம்பர் 13-ம் தேதி பிறந்தார்.52 வது வயதில் வார்னே கடந்த மார்ச் 4-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கிரிக்கெட் உலகம் மீளவில்லை என்றே சச்சினின் இந்த உருக்கமான ட்வீட் பறைசாற்றுகிறது:

Thinking of you on your birthday Warnie!
Gone too soon. Had so many memorable moments with you.
Will cherish them forever mate. pic.twitter.com/0a2xqtccNg— Sachin Tendulkar (@sachin_rt) September 13, 2022

Also Read: மறைந்த லெக்ஸ்பின் மேதை ஷேன் வார்ன் பிறந்த தினம் இன்று..! 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வார்னேவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், உங்கள் பிறந்த தினத்தன்று உங்களை நினைக்கின்றேன் வார்னி. இத்தனை விரைவில் எங்களை விட்டுப் போய்விட்டீர்களே! உங்களுடன் மிகவும் மறக்க முடியாத பல நினைவுகளை என்னில் கொண்டுள்ளேன். அவற்றை என்றென்றும் போற்றுவேன்' என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Cricket, Sachin tendulkar, Shane Warne, Twitter

அடுத்த செய்தி