Home /News /sports /

தோனி -கேதர் ஜாதவ் திணறல் பேட்டிங்! அதிருப்தி தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

தோனி -கேதர் ஜாதவ் திணறல் பேட்டிங்! அதிருப்தி தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் சச்சின். (2010 பிப்ரவரி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டி)

ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் சச்சின். (2010 பிப்ரவரி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டி)

இந்திய அணி பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். தோனி, ஜாதவ் பாட்னர்ஷிப் வருத்தத்தை ஏற்படுத்தியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தோனி மற்றும் கேதர் ஜாதவ் பாட்னர்ஷிப் மிகவும் மெதுவாக ரன்களைச் சேர்ந்தது வருத்தமாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பைத் தொடரின் 28-வது லீக் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வை செய்தது. ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சைத் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.

    இந்த போட்டியில் 5-வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 52 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். தோனியின் இந்த மோசமான ஆட்டத்தை பலரும் விமர்ச்சித்து வருகின்றனர். அதேபோல, கேதர் ஜாதவ்வும் மிகப் பொறுமையாக ஆடி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இந்தநிலையில், தோனியின் பேட்டிங் குறித்து சச்சின் டெண்டுல்கரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பா இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ‘நேற்றைய போட்டியில் நான் சற்று ஏமாற்றமடைந்துள்ளேன். இந்தப் போட்டியில், இந்திய அணி பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். தோனி, ஜாதவ் பாட்னர்ஷிப் வருத்தத்தை ஏற்படுத்தியது. அது மிகவும் மெதுவாக இருந்தது. 34 ஓவர்கள் சுழற்பந்தை எதிர் கொண்டுள்ளோம். அதில், வெறும் 119 ரன்கள் மட்டுமே சேர்ந்துள்ளோம்.

    ஒரு பகுதியில் நாம் வலுவற்று உள்ளதாக தெரிகிறது. அங்கு, சாதகமான சூழல் இல்லை. ஒவ்வொரு ஓவருக்கு 2-3 டாட் பால்கள் இருந்தன. 31-வது ஓவரில் விராட் கோலி அவுட் ஆன பிறகு, 45-வது ஓவர் நாம் போதிய ரன் சேர்க்கவில்லை. இதுவரையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வெளிநாடுகளில் விளையாடும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அது அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்கும். கேதர் ஜாதவ்வும், தோனியாலும் போதுமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் சேர்க்க முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Sachin tendulkar

    அடுத்த செய்தி