5 1/2 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் களத்தில் சச்சின்.. சந்தித்த முதல் பந்திலேயே.... - வீடியோ

Sachin Tendulkar |

5 1/2 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் களத்தில் சச்சின்.. சந்தித்த முதல் பந்திலேயே.... - வீடியோ
Sachin Tendulkar |
  • News18
  • Last Updated: February 9, 2020, 11:48 AM IST
  • Share this:
சுமார் 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

ஆஸ்திரேலிய காட்டுத் தீ-க்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டி மெல்பர்னில் இன்று நடந்தது. இதில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியின் பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.

இந்தப் போட்டி நடக்கும் அதே மைதானத்தில் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சின் ஒரு ஓவர் விளையாட வேண்டும் என்றும், இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்.

எல்லிஸ் பெர்ரியின் இந்த கோரிக்கைக்கு சச்சினும் உடனே இசைவு தெரிவித்தார். இன்று நடந்த போட்டியில், எல்லிஸ் பெர்ரி பந்து வீச, சச்சின் களமிறங்கினார்.

தான் சந்தித்த முதல் பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார்.First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading