இந்தியாவில் சச்சின், சேவாக், லாரா பங்கேற்கும் டி20 தொடர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் சச்சின், சேவாக், லாரா பங்கேற்கும் டி20 தொடர்! ரசிகர்கள் மகிழ்ச்சி
சச்சின் - லாரா
  • Share this:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டியில் சச்சின், லாரா, சேவாக் உள்ளிட்டோர் களமிறங்க உள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் உலக சீரிஸ் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 6 முதல் 16 வரை நடைபெற உள்ள இந்த தொடர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நடைபெற உள்ளது.

Road Safety World Series என்ற இந்த டி20 தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சேவாக், பிரெட் லீ, தில்ஷன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் விளையாட சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.


46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் 34,000 ரன்களை அடித்துள்ள சச்சின், சர்வதேச கிரிக்கெட் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 டெஸ்ட் போட்டிகளில் இமலாய சாதனையும் சச்சின் படைத்துள்ளார்.

Also Watch

First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்