நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியைக் குறிப்பிட்டு இனவெறிக்கு எதிராக சச்சின் ட்வீட்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியை குறிப்பிட்டு இனவெறிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியைக் குறிப்பிட்டு இனவெறிக்கு எதிராக சச்சின் ட்வீட்
சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இனவெறிக்கு எதிராக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் மாகணத்தில் போலீசார் தாக்கியதில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தின் மீது தனது முழங்காலை வைத்து அழுத்தி உள்ளார். தன்னால் மூச்சு விட முடியவில்லை என்ற போதும் சற்றும் இறக்கமில்லாமல் அந்த காவல்துறை அதிகாரியின் செயல்படால் ஜார்ஜ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்கா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. ஜார்ஜ் பிளாய்டின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.


அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி தாக்குதலுக்கு பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் இனவெறிக்கு எதிராக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற தருணத்தின் வீடியோவை பதிவு செய்துள்ளார். உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் பலதரப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள். அந்த வீடியோவுடன் நெல்சன் மண்டேலா அவர்களின் பொன்மொழி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில் "விளையாட்டு இந்த உலகத்தை மாற்றும் தன்மை கொண்டது. அது வேறு எதையும் விட எளிதாக இந்த உலகத்தை ஒன்றிணைக்கும் சக்தியை கொண்டது" என்று இனவெறிக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading