• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒரு நாள் போட்டி முறையில் புதிய மாற்றம்..? ஜாம்பவான் சச்சினின் பலே ஐடியா

ஒரு நாள் போட்டி முறையில் புதிய மாற்றம்..? ஜாம்பவான் சச்சினின் பலே ஐடியா

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

  • Share this:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் சில மாற்றங்களை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைத்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 50 ஓவர்களை ஆடுகின்றன. இனி அதற்குப் பதிலாக டாஸ் வெல்லும் அணி முதலில் 25 ஓவர்கள் ஆடவேண்டும் என்றும் எதிரணி அடுத்த 25 ஓவர்களை ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் சச்சின்.

டாஸ் வென்ற அணி எஞ்சியுள்ள 25 ஓவர்களை பின்னர் விளையாடவேண்டும் எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து இரண்டாவது அணி கடைசி 25 ஓவர்களை ஆடலாம் என பரிந்துரைத்துள்ளார்.

தற்போது நடைபெறும் போட்டிகளில் மைதானத்தில் பனி இருந்தால் இரண்டாவதாக பந்து வீசும் அணி வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு என சுட்டிக்காட்டியுள்ள சச்சின், இவ்வாறு இரு அணிகளையும் மாறி மாறி ஆடச் செய்வது இரு அணிகளுக்கும் சமதளத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Also Watch : நடிகை மீரா மிதுன் மீது போலீசில் வழக்குப் பதிவு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: