சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதன் மீதான ஆர்வம் சற்றும் அவருக்கு குறையவே இல்லை என்றே சொல்லலாம்.
அதற்கு உதரணமாக ஒரு வீடியோவை தற்போது இன்று பதிவு செய்துள்ளார். நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் 2020ஆம் ஆண்டு ஊக்கமளிக்கும் காட்சியுடன் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் சராசரி சிறுவர்களுக்கு இணையாக, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் பார்ப்பவர்களின் மதை நெகிழ வைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.