முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘சச்சினுக்கு எல்லாம் தெரியும். ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை’..வறுமையில் வினோத் காம்பிளி!

‘சச்சினுக்கு எல்லாம் தெரியும். ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை’..வறுமையில் வினோத் காம்பிளி!

வினோத் காம்பிளி மற்றும் சச்சின் டெண்டுல்கர்.

வினோத் காம்பிளி மற்றும் சச்சின் டெண்டுல்கர்.

எல்லோரையும் போல் கொரோனா ஊரடங்கால் காம்பிளியும் கடுமையாகப் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்.

  • Last Updated :

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் உற்ற தோழருமான வினோத் காம்பிளி தான் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், பிசிசிஐ அளிக்கும் பென்ஷனை மட்டுமே நம்பி வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் காம்பிளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால சிநேகிதர். இருவரும் ஒன்றாகவே கிரிக்கெட் பயிற்சி எடுத்து இந்திய அணிக்குத் தேர்வானவர்கள். ஆனால் டெண்டுல்கர் அளவிற்கு காம்பிளியால் கிரிக்கெட்டில் ஜொலிக்கமுடியவில்லை.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து அணிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த காம்பிளி, 2019-ம் ஆண்டு டி20 மும்பை லீக் தொடரில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார். அதன் பின் எல்லோரையும் போல் கொரோனா ஊரடங்கு அவரையும் கடுமையாகப் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்துப் பேசியுள்ள காம்பிளி “நான் பிசிசிஐ பென்சனை நம்பியுள்ள ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட்டர். என்னுடைய ஒரே வருமானம் பிசிசிஐ எனக்கு அளிப்பதே. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதுதான் என் குடும்பத்தைக் காக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

அவருடைய பொருளாதார நிலைக் குறித்து அவரது உற்றத்தோழர் சச்சின் டெண்டுல்கருக்குத் தெரியுமா எனக் கேட்டதற்கு “அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அவர்தான் டெண்டுல்கர் மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில் பணியைப் பெற்றுத்தந்தார். நான் அதனால் மகிழ்ச்சியடைந்தேன். அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் எனக்கு எப்போதும் உற்றத்தோழனாக இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு தனக்கு ஏதாவது பணி வாய்ப்புகள் வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Cricket, Sachin tendulkar