முகப்பு /செய்தி /விளையாட்டு / இவருக்கா இந்த நிலைமை?- பணக் கஷ்டத்தில் தவிக்கும் வினோத் காம்ப்ளி

இவருக்கா இந்த நிலைமை?- பணக் கஷ்டத்தில் தவிக்கும் வினோத் காம்ப்ளி

பணக்கஷ்டத்தில் காம்ப்ளி.

பணக்கஷ்டத்தில் காம்ப்ளி.

சச்சின் டெண்டுல்கரின் சிறந்த நண்பரும் முன்னாள் இந்திய இடது கை கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு இப்போது பிசிசிஐ கொடுக்கும் மாத பென்ஷன் ரூ.30,000 தவிர வேறு வருமானம் ஏதுமில்லை, இதனால் அவர் பணக்கஷ்டத்தில் திண்டாடுகிறார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

சச்சின் டெண்டுல்கரின் சிறந்த நண்பரும் முன்னாள் இந்திய இடது கை கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு இப்போது பிசிசிஐ கொடுக்கும் மாத பென்ஷன் ரூ.30,000 தவிர வேறு வருமானம் ஏதுமில்லை, இதனால் அவர் பணக்கஷ்டத்தில் திண்டாடுகிறார்.

என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் அந்த 789 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் உலகிற்கு தெரியவந்தனர், இருவரும் ஒரே அணிக்கு ஆடிய சிறந்த நண்பர்கள், சச்சின் 1989-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தன் 16 வயதில் வந்தார். வினோத் காம்ப்ளி அதன் பிறகு இந்திய அணிக்குள் வந்தார்.

வந்தவுடனேயே சச்சினை ஓரங்கட்டும் அளவுக்கான பிரமாதமான பார்மில் இருந்தார் காம்ப்ளி. முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 793 ரன்களை 113.29 என்ற சராசரியில் எடுத்தார் வினோத் காம்ப்ளி. இதில் இரண்டு இரட்டைச்சதங்களும் அடங்கும். ஆனால் தனக்குக் கிடைத்த புகழை சச்சின் அடக்கி வாசிக்க, வினோத் காம்ப்ளியிடம் கொஞ்சம் தறிகெட்ட தனம் புகுந்து கொண்டது. 9 முறை அணிக்கு போய் போய் வந்துள்ளார், கடைசியாக அவருக்கு கதவுகள் மூடப்பட்டன.

1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோற்றவுடன் கேப்டன் முகமது அசாருதீன் அறைக்குச் சென்று தகராறு செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதாவது அந்தப் போட்டியில் கொல்கத்தாவில் பிட்ச் இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கு எதிராக இருக்கும், ஆட முடியாது என்பதே கணிப்பு, ஆனால் அசாருதீன் டாஸ் வென்று முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார், இலங்கை 250 ரன்கள் பக்கம் அடித்தது, இந்தியா 99 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் பக்கம் 8 விக்கெட்டுகளை இழந்தது, காரணம் பந்து ஜெயசூரியாவுக்கே சதுரமாகத் திரும்பியது.

மைதானத்தில் ரசிகர்கள் ரெகளையில் ஈடுபட அந்தப் போட்டி நோ-ரிசல்ட் என்று முடிந்தது, ஆனால் இலங்கை இறுதிக்கு முன்னேறியது. ஆட முடியவில்லை, இதனையடுத்து டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது பெரிய தவறு இதில் ஏதோ சதி இருக்கிறது என்ற பேச்சுக்கள் எழ அசாருதீனை கடும் வார்த்தைகளால் காம்ப்ளி வசைபாடியதாக செய்திகள் எழுந்தன, அதன் பிறகே அவர் இந்திய அணியில் சரிவர இடம்பெறவில்லை.

50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்த போது மிகவும் ஆரம்பத்திலேயே ஓய்வு பெற்றார் வினோத் காம்ப்ளி. இது இந்திய அணிக்கு ஒரு பேரிழப்புதான். சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை கேப்டனான போது வினோத் காம்ப்ளியை மீண்டும் கொண்டு வந்தார், இப்படி பலமுறை வந்தார் சென்றார்.

இன்று அவருக்கு வெறும் பென்ஷன் தான் வருமானம், பிசிசிஐ ஓய்வு பெற்ற வீரர்களுக்குக் கொடுக்கும் ரூ.30,000 மட்டுமே அவரது வருவாய்.

“நான் ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் இன்று என் வாழ்வாதாரம் பிசிசிஐ கொடுக்கும் ரூ.30,000மட்டுமே. அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது என் குடும்பத்தை கவனிக்கப்போதுமானதாக உள்ளது.

என்னை பயன்படுத்திக் கொள்ளலாம், இளம்வீரர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அமோல் மஜூம்தாரை மும்பை ஹெட் கோச்சாக வைத்துள்ளது.  எங்காவது தேவைப்பட்டால் நானும் வருகிறேன்.

மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டிருக்கிறேன். கிரிக்கெட் இம்ப்ரூவ்மெண்ட் கமிட்டியில் இருக்கிறேன், ஆனால் இது கவுரவ பதவிதான். எனக்கு குடும்பம் இருக்கிறது, 30,000 பென்ஷன் மட்டும் போதாது. எனவே நான் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டேன்.

சச்சின் டெண்டுல்கருக்கு என் நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு டெண்டுல்கர்-மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன், சச்சின் எனக்கு சிறந்த நண்பர். எப்போதும் எனக்கு அவர் இருக்கிறார்.

top videos

    அப்போதெல்லாம் ஷர்தாஸ்ரம பள்ளிக்கு எங்கள் அணி செல்லும் போது நான் அங்குதான் உணவு உண்பேன். அங்குதான் சச்சின் என் நண்பனாக எழுந்து நின்றார். நான் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன்” என்றார் வினோத் காம்ப்ளி.

    First published:

    Tags: Sachin tendulkar