• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Sachin vs Kohli | அக்ரம் பந்தில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய சச்சின், அடுத்த பந்தையே சிக்ஸ் விளாசினார்: இதே கோலியாக இருந்திருந்தால்..- வெங்கடேஷ் பிரசாத் ருசிகரம்

Sachin vs Kohli | அக்ரம் பந்தில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய சச்சின், அடுத்த பந்தையே சிக்ஸ் விளாசினார்: இதே கோலியாக இருந்திருந்தால்..- வெங்கடேஷ் பிரசாத் ருசிகரம்

கோலி-சச்சின்

கோலி-சச்சின்

லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் குணாம்சத்தையும் மிகை உணர்ச்சி விராட் கோலியையும் ஒப்பிடக் கூடாது, ஆனால் முன்னாள் இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

  • Share this:
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா உற்பத்தி செய்த உலகத்தின் இரண்டு தலைசிறந்த பேட்ஸ்மென்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி. இருவரும் அபாரமான தனிப்பட்ட வீரர்கள். சச்சின் மிகவும் மென்மையான மனநிலைப் படைத்தவர் ஆனால் விராட் கோலி ஆக்ரோஷமானவர் ஆனால் கோலியின் இயல்பு இதுவல்ல என்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

“களத்தில் மட்டும்தான் விராட் கோலி இப்படி, வெளியில் அவருமே அமைதியான ஒரு நபர்தான். களத்தில் அவர் அப்படியிருக்கக் காரணம் ஒவ்வொரு போட்டியையும் வென்றாக வேண்டும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தினால்தான்.

சச்சினும் அப்படித்தான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பவர், ஆனால் நாம் சச்சினிடம் பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. அவர் டக் அடித்தாலும் சதம் அடித்தாலும் அவரை யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவருக்கு அடிப்பட்டால் கூட உணர்ச்சியைக் காட்ட மாட்டார்.

ஆனால் விராட் கோலி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்பவர்.

ஷார்ஜாவில் ஒரு முறை நன்றாக நினைவிருக்கிறது, வாசிம் அக்ரம் பந்தில் சச்சின் அடி வாங்கினார், ஹெல்மெட்டைப் பந்து தாக்கியது.. வாசிம் அக்ரமின் அந்தப் பந்து மணிக்கு 145 கிமீ வேகம் கொண்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை, அவர் அதைக் கணிக்கும்போது ஹெல்மெட்டைப் பந்து தாக்கிவிட்டது.

அப்போது லெக் அம்பயர் பக்கம் சென்று தன் தலையை மட்டும் ஆட்டினார். அவர் தன் ஹெல்மெட்டைக் கூட கழற்றவில்லை.

பிறகு அடுத்த பந்துக்குத் தயாரானார். அது புதிய பந்து சச்சின் தொடக்க வீரர். 2வது பந்தும் நன்றாகக் குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் தான் அது, இந்தப் பந்தும் சச்சின் தலையைக் குறிவைத்து வீசப்பட்டதுதான் ஆனால் இம்முறை பந்து சிக்சருக்குப் பறந்தது, இப்போதும் சச்சின் உணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

இதே விராட் கோலியாக இருந்தால் அந்த சிக்சரை அடித்த பிறகு முஷ்டியை உயர்த்துவா, பவுலரை முறைத்திருப்பார். இருவரும் இரு வித்தியாசமான கேரக்டர்கள், ஆனால் இருவருமே கிரிக்கெட் ஆட்டம் வளம்பெற மிக முக்கியமான வீரர்கள்” என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

பிரசாத் கூறுவது உண்மைதான் சச்சின் உணர்ச்சிவயப்பட மாட்டார். ஒருமுறை ஜிம்பாப்வே பவுலர் ஹென்றி ஒலாங்கோ பவுன்சரில் சச்சினை வீழ்த்தி விட்டு ஒரு டான்ஸ் போட்டார், சச்சின் ஒன்றுமே செய்யவில்லை, அடுத்த போட்டியில் அவரை மட்டும் குறிவைத்துத் தாக்கினார், ஹென்றி ஒலாங்கோ கரியரே பாழானது.

அதே போல் 2003 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து ஊடகங்களும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ கேடிக்கும் சச்சின் டெண்டுல்கர் எல்.பி. வீரர் என்று கேலி பேசினர், அப்போதே தெரிந்தது காடிக்கிற்கு அடி உண்டு என்பது, மறுநாள் இங்கிலாந்து முதலில் பவுலிங் சச்சின் ஓப்பனிங், கேடிக் வீசினார் ஷார்ட் பிட்ச் பந்து மைதானத்துக்கு வெளியே சிக்ஸ் விளாசினார் சச்சின், அடுத்த இரண்டு பந்துகள் பேக் ஃபுட் பஞ்ச் ஆஃப் திசையில் பவுண்டரி பறந்த்து, எல்.பி. அவுட் ஆக்குவேன் என்று கூறியதற்கு சச்சின் அளித்த பனிஷ்மெண்ட்.

ஆனால் விராட் கோலி இதுபோல் கட்டம் கட்டி ஒருபவுலரையும் விளாசியதெல்லாம் இல்லை. கென்யாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் சச்சின் டெண்டுல்கர் மெக்ராவை ஒரே ஓவரில் 2 சிக்ஸ் 2 பவுண்டரி விளாச மெக்ரா நடுவரிடமிருந்து தொப்பியை கோபத்தில் பிடுங்கிக் கொண்டு சென்றார். 1996 உலகக்கோப்பையில் ஆஸிக்கு எதிரான போட்டியில் இந்தியா 0வுக்கு 2 விக்கெட், அப்போதும் கூட மெக்ராவின் ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசினார் சச்சின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: