Home /News /sports /

ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து உலகிலேயே  சச்சின் டெண்டுல்கர்தான்- அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்

ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து உலகிலேயே  சச்சின் டெண்டுல்கர்தான்- அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்

உலகிலேயே அதிகம் பாராட்டப்படும் வீரர்களில் சச்சின் 3ம் இடம், கோலி 4ம் இடம்

உலகிலேயே அதிகம் பாராட்டப்படும் வீரர்களில் சச்சின் 3ம் இடம், கோலி 4ம் இடம்

    உலகிலேயே அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டீனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்குப் பிறகு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் 3வது இடம் என்றால், அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4ம் இடத்தில் இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

    பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனம் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான யூகவ் நிறுவனம் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. பலதுறைகளிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகம் பாராட்டப்படும் ஆளுமையாகத் திகழ்கிறார்.

    இதையும் படிங்க: தில்லையில் தேரோடலைன்னா மன்னனுக்கு கேடு.. அரசு புரிஞ்சு நடக்கனும் - ஹெச்.ராஜா

    Must Read: குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன வழி?

    இதையும் படிங்க: கோலி -ரோகித் சர்மா இருவர் மீதும் தோனி அதிருப்தி அடைந்தார்
     ஒபாமாவுக்கு அடுத்ததாக பில் கேட்ஸும் அடுத்த இடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தில் இருக்கிறார். பிரபல பாலிவுட் ஸ்டார்களான ஷாரூக் கான் மற்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் முறையே 14 மற்றும் 15ம் இடத்தில் இருக்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Narendra Modi, Sachin tendulkar, Virat Kohli

    அடுத்த செய்தி