சச்சினின் இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது! வீடியோ வெளியிட்டு பிசிசிஐ பெருமிதம்

Vijay R | news18-tamil
Updated: October 17, 2019, 5:09 PM IST
சச்சினின் இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது! வீடியோ வெளியிட்டு பிசிசிஐ பெருமிதம்
சச்சின் டெண்டுல்கர்
Vijay R | news18-tamil
Updated: October 17, 2019, 5:09 PM IST
சச்சின் டெண்டுல்கர் 2008-ம் ஆண்டு படைத்த டெஸ்ட் கிரிக்கெட் சாதனையின் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது. சதத்தில் சதம் அடித்தவர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். 46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

தனது 24 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் 200 டெஸ்ட், 463 ஒரு நாள் போட்டிகள், ஒரு சர்வதேச டி20 போட்டி என விளையாடி சச்சின் 30,000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் 78 போட்டிகளில் விளையாடினார்.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை சச்சின் இன்று தான் நிகழ்த்தினார். 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் இந்த சாதனையை படைத்தார்.

மேற்கிந்திய வீரர் லாரா 131 டெஸட் போட்டியில் விளையாடி 11,953 ரன்கள் எடுத்து டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். சச்சின் 152வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை முறியடித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளார். அந்த வீடியோவை தான் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள் மற்றும் 68 அரைசதங்களையும் சச்சின் அடித்துள்ளார்.

Also Watch

First published: October 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...