• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2007-ல் கிரெக் சாப்பல் செய்த அதே மிஸ்டேக், கோலி இப்போது செய்து வருகிறார்: சேவாக் சாடல்

2007-ல் கிரெக் சாப்பல் செய்த அதே மிஸ்டேக், கோலி இப்போது செய்து வருகிறார்: சேவாக் சாடல்

சேவாக்.

சேவாக்.

சச்சின் 4ம் நிலையில் இறங்கினார் என்ன ஆச்சு என்பதை நாமே பார்த்தோம். மோசமாக ஆடும்போது உத்தியை மாற்றலாம். ஆனால் நன்றாக இருப்பதை யாராவது மாற்றுவார்களா? கோலி 2021-ல் அதே தவறைத்தான் செய்து வருகிறார். 2007 உலகக்கோப்பை உதாரணம்தான் என்னைப் பொறுத்தவரை சிறந்த உதாரணம்.

  • Share this:
    2007-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரில் என்ன தவறு செய்தோமோ அதையே கோலி இப்போது 2021 டி20 உலகக்கோப்பையில் ரிபீட் செய்கிறார் என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் சாடியுள்ளார்.

    2007- உலகக்கோப்பைத் தொடரில் ராகுல் திராவிட் கேப்டனாக இருந்தார், கிரெக் சாப்பக் பயிற்சியாளராக இருந்தார், தொடர்ச்சியாக 17 ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் இந்தியா வென்றது இன்று வரை ஒரு உலக சாதனையாக உள்ளது. ஆனால் உலகக்கோப்பை 2007-ல் முதல் சுற்றிலேயே வங்கதேசம், இலங்கையிடம் தோல்வி தழுவி வெளியேறினோம்.

    இதற்கு மெயின் காரணம் தொடக்க வீரராக கங்குலி, சச்சின் இறங்கி வெளுத்து வாங்கிய பொற்காலமாகும் அது, அதை கிரெக் சாப்பல் திராவிடை வைத்து மாற்றினார். சச்சின் டெண்டுல்கரை 4ம் நிலையில் இறக்கினார். இந்த சோதனை முயற்சியினால் நல்ல அணி படுதோல்வி அடைந்து இந்தியா திரும்பியது. சச்சின், சேவாக், கங்குலி, திராவிட், யுவராஜ் சிங், தோனி என்று பிரமாதமான அணி அது. ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறினோம்.

    இதைத்தான் சேவாக் கூறுகிறார், “2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் நாம் இரு தவறுகள் செய்தோம், 17 போட்டிகளில் சேசிங்கில் தொடர்ச்சியாக வென்று சாதனை புரிந்தோம். ஆனால் உலகக்கோப்பை நெருங்கியவுடன் கிரெக் சாப்பல், நமக்கு பேட்டிங் பிராக்டீஸ் தேவை என்றார். முதலில் 2 போட்டிகளில் வென்று விடுவோம், பிறகு 6 போட்டிகள் உள்ளன, அதில் மாற்றங்களைச் செய்யலாம் என்றேன். ஆனால் கிரெக் சாப்பல், ‘நோ’ என்றார்.

    2வது மிஸ்டேக் என்னவெனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஓபனிங் ஜோடியாக வெளுத்து வாங்கி வந்த காலம். ஏன் அதை உடைக்க வேண்டும்? டெண்டுல்கர் மிடில் ஆர்டரில் இருந்தால் நமக்கு இன்னும் கட்டுப்பாடு இருக்கும் என்று கிரெக் சாப்பல் கூறினார். ஏன் இது?

    ஏற்கெனவே மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங், திராவிட், தோனி இருக்கின்றனர், இவர்கள் கொண்டு செல்ல மாட்டார்களா? தேவையில்லாமல் தொடக்க ஜோடியை உடைத்து நாம் வெளியேறியதுதான் மிச்சம். சச்சின் 4ம் நிலையில் இறங்கினார் என்ன ஆச்சு என்பதை நாமே பார்த்தோம். மோசமாக ஆடும்போது உத்தியை மாற்றலாம். ஆனால் நன்றாக இருப்பதை யாராவது மாற்றுவார்களா? கோலி 2021-ல் அதே தவறைத்தான் செய்து வருகிறார். 2007 உலகக்கோப்பை உதாரணம்தான் என்னைப் பொறுத்தவரை சிறந்த உதாரணம்.” என்றார் சேவாக்.

    சேவாக் சொல்வதில் 75% உண்மையிருந்தாலும் கிரெக் சாப்பல் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க 3ம் நிலையில் பரிசோதனை முயற்சியாக அனைவருக்கும் வாய்ப்பளித்தார். ராகுல் திராவிட் கேப்டன்சிக்கு அப்போது சச்சின் உட்பட மூத்த வீரர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதே அப்போது எழுந்த விமர்சனம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: