சுப்மன் கில் காயம் பற்றி சந்தேகித்து கங்குலியை அவமதிக்கிறார் சபா கரீம்: பிசிசிஐ காட்டம்

சுப்மன் கில்..

இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் காயமடைந்து இந்தியா திரும்புவதையடுத்து அவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்?, ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் எப்படி தேறினார் போன்ற கேள்விகளை முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும் இந்திய அணித் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினருமான சபா கரீம் எழுப்பினார்.

  • Share this:
    இந்திய அணியில் இது போன்று காயங்களை மறைத்து கிரிக்கெட் பயணங்களுக்குச் செல்வது ஒன்றும் புதிதல்ல. கேப்டன் மற்றும் கோச் ஆசீர்வாதம் இருந்தால் தீவிரமில்லாத எந்தக் காயத்தை வைத்துக் கொண்டும் அணியில் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பிய்ன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடி சொதப்பிய சுப்மன் கில் பேட்டிங் குறித்து பலரும் விமர்சித்தனர், இங்கிலாந்துக்கு எதிராக அவர் எப்படி ஆடப்போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    அப்போதுதான் அவர் காயமடைந்ததாக தகவல்கள் உறுதியாகி அவர் நாடு திரும்புகிறார் என்ற செய்தியும் உறுதியானது.

    இதனையடுத்து சுப்மன் கில் காயம் குறித்து சபா கரீம் தீவிர சந்தேகங்களை எழுப்பினார். மருத்துவக் குழுவின் கண்களில் எப்படி மண் தூவப்பட்டது, கில் எப்படி தேர்வானார் என்று வரிசையாக பல கேள்விகளை சபா கரீம் மிகச்சரியாக எழுப்பினார்.

    ஆனால் பிசிசிஐ அதிகாரிக்கு சபா கரீமின் கேள்விகள் உவப்பானதாக இருக்கவில்லை. இது தொடர்பாக பெயர் கூறாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “அணித்தேர்விலும் வீரர்கள் உடல் தகுதி விவகாரத்திலும் கண்டிப்பான நபர் கங்குலி, விதிமுறைகளைக் கடைப்பிடிப்பவர், இப்படி இருக்கும் போது சபா கரீமின் சந்தேகங்கள் கங்குலியை சந்தேகிப்பது போல் உள்ளது, இது தவறு.

    இப்படிக் கூறுவதன் மூலம் சுப்மன் கில் மீதும் கங்குலி மீதும் சபா கரீம் அவதூறு பரப்புவதாகாதா? இத்தனைக்கும் சபா கரீம் சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பங்கு வகித்தவர், இங்கு என்ன மாதிரியான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன, விதிமுறைகள் என்று அனைத்தையும் சபா கரீம் அறிந்தவர், அவர் இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய நடைமுறைகளின் படி எந்த வீரரும் காயத்தை மறைக்க முடியாது. ஒருவேளை சபா கரீம் வீரராக இருக்கும் போதோ அல்லது நிர்வாகத்தில் இருக்கும்போதோ அப்படி நடந்திருக்கலாம், ஆனால் இப்போது சாத்தியமில்லை.

    சுப்மன் கில் மிகவும் நேர்மையான நபர். இங்கிலாந்தில்தான் அவர் காயமடைந்தார். பிசிசிஐயின் பொது மேலாளர் பதவி வகித்த சபா கரீம் இப்படி பேசுவது துரதிர்ஷ்டமே” என்றார்.

    ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் தொடங்குகிறது.
    Published by:Muthukumar
    First published: