ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்கா டி20 லீக் : முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸை 8 விக். வித்தியாசத்தில் வென்றது எம்.ஐ. கேப் டவுன்

தென்னாப்பிரிக்கா டி20 லீக் : முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸை 8 விக். வித்தியாசத்தில் வென்றது எம்.ஐ. கேப் டவுன்

எம்.ஐ. கேப்டவுன் வீரர் பிரிவீஸ்

எம்.ஐ. கேப்டவுன் வீரர் பிரிவீஸ்

பல்வேறு நாடுகளில் 20 ஓவர் லீக் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது தென்னாப்பிரிக்காவும் இணைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் ஆப்ரிக்கா சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் எம்.ஐ. கேப் டவுன் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் களைகட்டி வரும் ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடக்கூடிய நாடுகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ், பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கையின் லங்கா சூப்பர் லீக் என்பதன் வரிசையில் தற்போது தென் ஆப்ரிக்காவும் இணைந்துள்ளது. நடப்பாண்டிலிருந்து தென் தென் ஆப்ரிக்க சூப்பர் லீக் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், அணி MI கேப் டவுண், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி  - சன்ரைசஸ் ஈஸ்டன் கேப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பார்ல் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணி -  டர்பன் சூப்பர் ஜெய்ண்ட் என்ற பெயரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடர் ஜனவரி 10 ம் தேதியிலிரிந்து - பிப்ரவரி 11 ம் தேதி வரை மொத்தம் 33 போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில்  நடத்தப்படுகிறது.

நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப் டவுன் அணியும் - மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற எம் ஐ கேப்டவுன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ராயல்ஸ் அணியில் பட்லர் அரைசதம் விளாச, கில்லர் மில்லர் கை கொடுக்க 20 ஓவருக்கு 142 ரன்கள் சேர்த்தது.

தொடரை வெல்லுமா இந்திய அணி? – நாளை இலங்கையுடன் 2ஆவது ஒருநாள் போட்டி…

143 ரன்களை இலக்காக கொண்டு களமுறங்கிய எம் ஐ அணியின் ஓபனர் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் 15.3 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகின்றன. இவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் நேரலை செய்யப்படுகிறது.

First published:

Tags: Cricket