Home /News /sports /

NZ vs SA 2nd test day 4-தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை- தோல்வியைத் தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்

NZ vs SA 2nd test day 4-தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை- தோல்வியைத் தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்

ரபாடா அபாரம்

ரபாடா அபாரம்

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இரண்டாவது, இறுதி டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. இன்னும் 332 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய வரலாற்றை நிகழ்த்தும், ஆனால் தென் ஆப்பிரிக்காவோ நியூசிலாந்துக்கு தொடரை வெல்லும் வாய்ப்பை மறுத்துள்ளது. ஏனெனில் 426 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 4ம் நாளான இன்று நியுசிலாந்து ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்துள்ளது.

மேலும் படிக்கவும் ...

    நியூசிலாந்தின் இரும்பு மனிதன் டெவன் கான்வே 60 ரன்களுடனும் டாம் பிளெண்டல் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர், முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெரைன் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து 16 பவுண்டரி 1 சிக்சருடன் 187 பந்துகளில் 136 ரன்கள் விளாசினார். நாட் அவுட்டாகவும் இருந்தார். வியான் முல்ட 35 ரன்களையும், ரபாடா இறங்கி கடைசியில் காட்டடி தர்பார் நடத்தி 34 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து 426 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து உலக சாதனை நிகழ்த்தி, முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாறு படைக்கு என்று எதிர்பார்த்தால் ரபாடாவின் வேகத்துக்கு 2 விக்கெட்டுகளையும் மகராஜின் சுழலுக்கு 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 94/4 என்று உள்ளது. இதன் மூலம் தோல்வியைத் தவிர்க்க போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ரபாடா மூன்றாவது பந்தில் வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். கல்லியில் கேட்ச். மற்றும் டாம் லாதம் விக்கெட்டைரபாடா தனது இரண்டாவது ஓவரில் ஷார்ட் லெக்கில் கேட்ச் செய்தபோது, ​​தென்னாப்பிரிக்கா போட்டியை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்ற எண்ணம் இருந்திருக்கும். கேசவ் மஹாராஜ் 12வது ஓவரில் ஹென்றி நிக்கோல்சை கிளீன் பவுல்டு செய்தார். ஆனால் டேரில் மிட்செல் மற்றும் டெவன் கான்வே ஆகியோருக்கு இடையேயான 56 ரன்கள் நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப் போட்டியை ஐந்தாவது நாளுக்கு கொண்டு சென்றது.

    பாகிஸ்தானுக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் (ஜேட் ஸ்டேடியம்) நியூசிலாந்தின் அதிகபட்ச வெற்றி துரத்தல் 5 விக்கெட்டுக்கு 324 ஆகும், ஆனால் அது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஹாக்லி ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய ஸ்கோராகும். இந்நிலையில் நியுசிலாந்து 425 ரன்கள் எடுத்தால் இதுதான் உலகின் ஆகச்சிறந்த சேஸிங் ஆகும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 418 ரன்களை சேஸ் செய்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது.

    நாளை 5ம் நாள் என்னநடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: New Zealand, South Africa, Test cricket

    அடுத்த செய்தி