முகப்பு /செய்தி /விளையாட்டு / நான் யார் என்று காட்டுகிறேன் என்றார், காட்டி விட்டார் பும்ரா- வெற்றிக்கு பாடுபடும் இந்தியா-போராடும் தென் ஆப்பிரிக்கா

நான் யார் என்று காட்டுகிறேன் என்றார், காட்டி விட்டார் பும்ரா- வெற்றிக்கு பாடுபடும் இந்தியா-போராடும் தென் ஆப்பிரிக்கா

பூம் பூம் பும்ரா 5 விக்கெட்

பூம் பூம் பும்ரா 5 விக்கெட்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேப்டவுன் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா 210 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருட்டி 13 ரன்கள் லீட் பெற்ற நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா ராகுல், அகர்வால் விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

2ம் நாள் ஆட்ட முடிவில் கோலி 14 நாட் அவுட் என்றும் புஜாரா 9 நாட் அவுட் என்றும் உள்ளனர். ராகுல் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து யான்செனின் ஆட வேண்டிய தேவையில்லாத பந்தை ட்ரைவ் ஆடி மார்க்ரமிடம் கேட்ச் ஆனார். மயங்க் அகர்வால் 7 ரன்களில் ரபாடாவின் ஆடியே ஆக வேண்டிய பந்தை ஆடினார், எட்ஜ் ஆனது எல்கர் கையில் கேட்ச் ஆனது, அருமையான பந்து. ஒன்றும் செய்ய முடியாது. 24/2லிருந்து மேலும் சேதம் ஏற்படாமல் கோலியும் புஜாராவும் 33 ரன்களைச் சேர்த்து 57 ரன்கள் எடுத்துள்ளனர்.

முன்னதாக பும்ரா அசாத்தியமாக வீசினார். தனது 27 டெஸ்ட்களில் 24வது அயல்நாட்டு டெஸ்ட்டில் ஆடுகிறார் பும்ரா. பிரமாதமாக 112 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7 முறை 5 விக்கெட்டுகள் (5/42) மைல்கல்லை எட்டியுள்ளார், 2018 முதல் எந்த ஒரு பவுலரும் இதைச் செய்ததில்லை என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம்.

டீன் எல்கருக்கு ஆட முடியாத பந்தை முதல் நாளில் வீசி எட்ஜ் ஆக்க வைத்த பும்ரா நேற்று காலை வந்தவுடனேயே 2வது பந்தை உள்ளே கொண்டு வர மார்க்ரம் ஆடாமல் விட பவுல்டு ஆனார். கேஷவ் மகராஜ் நன்றாக ஆடினார் 25 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஸ்டம்பு சாய்ந்தது. கீகன் பீட்டர்சன் (72) வருங்கால நட்சத்திரமும், வாண்டர் டசெனும் (21)சேர்ந்து 67 ரன்கள் சேர்த்தனர்.

2வது பந்தில் மார்க்ரம் பவுல்டு பும்ரா

தெம்பா பவுமா (28) உடன் இணைந்து கீகன் பீட்டர்சன் 47 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தார். வாண்டர் டசென் 21 ரன்களில் உமேஷ் யாதவ் ஸ்விங் பந்தை எட்ஜ் செய்து கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். தெம்பா பவுமா விக்கெட்டை ஷமி வீழ்த்தியது சரிவுக்குக் காரணமானது, பவுமா 28 ரன்களில் ஷமி ஒரு பந்தை சற்றே இழுத்து விட பிட்ச் ஆகி ஸ்விங் ஆக பவுமா மட்டையை பந்தில் தொங்க விட எட்ஜ் ஆகி கோலியிடம் கேட்ச் ஆனது. அதே ஓவரில் விக்கெட் கீப்பர் கைல் வெரைன் தேவையில்லாமல் தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்த ஷமி பந்தை தொட்டார், கெட்டார். டக் அவுட் ஆகி வெளியேறினார்.

கீகன் பீட்டர்சன்

20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் சரிய, மொத்தமாக 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா கீகன் பீட்டர்சன் 166 பந்துகளில் 9 அருமையான பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 179/8 என்று ஆனது.  யான்சென் 7 ரன்களில் பும்ரா பந்தில் பவுல்டு ஆனார். ஸ்டம்பு சிலபல அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

பும்ரா 7வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

அதன் பிறகு ரபாடா 15, டுவேன் ஆலிவர் 10 ஆகியோர் ஸ்கோரை 200 தாண்டி கொண்டு சென்றனர். ரபாடாவை ஷர்துல் தாக்கூர் வீழ்த்த கடைசி விக்கெட்டை பும்ரா கைப்பற்றி 5 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார், தென் ஆப்பிரிக்கா 210 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.

First published:

Tags: India vs South Africa, Jasprit bumrah