முகப்பு /செய்தி /விளையாட்டு / கிரிக்கெட் : SA 20 லீக் இறுதிப் போட்டி… கலர்ஸ் தமிழ் சேனலில் காணத் தவறாதீர்!!

கிரிக்கெட் : SA 20 லீக் இறுதிப் போட்டி… கலர்ஸ் தமிழ் சேனலில் காணத் தவறாதீர்!!

இறுதிப் போட்டியில் மோதும் அணிகளின் கேப்டன்கள்

இறுதிப் போட்டியில் மோதும் அணிகளின் கேப்டன்கள்

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO ஷ 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553) போன்ற அனைத்திலும் காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  SA20 லீக்கின்  இறுதி போட்டியில் வெற்றி மகுடம் சூட்டும்  அணி யார் என்பதை இன்று இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள். வயகாம் 18இன் தமிழ் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், SA20 லீக்கின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் இடையேயான பரபரப்பான ஆட்டத்தை இன்று (பிப்ரவரி 11) இரவு 8 மணிக்கு  ஒளிபரப்புகிறது. மொத்தம் 6 அணிகள் மோதிய நிலையில் லீக் கட்டத்தின் முடிவில் புள்ளி விவர  பட்டியலில்  பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பார்ல் ராயல்ஸ் , ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ,சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் முதல்  நான்கு இடத்தை பிடித்து அரையிறுதி ஆட்டத்தில் விளையாடினார்.  பின்‌  முதல் அரையிறுதி போட்டியில்  பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில்  பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் நாக் அவுட் செய்து  29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை அதே போல் நாக் அவுட் மூலம் வீழ்த்தி 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி.  இரண்டு அணிகளிலும் எய்டன் மார்க் ராம், ஆடம் ராசிங்டன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பில் சால்ட் , ஜேம்ஸ் நீஷம், அன்ரிச் நார்ட்ஜே போன்ற வலிமை மிக்க விளையாட்டு வீரர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கலாம் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடக்கும் இந்த SA20 லீக் இறுதிப் போட்டியானது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் பிப்ரவரி 11, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே இன்றைய SA20 லீக் இறுதிப் போட்டியின் பவர் பேக் அதிரடி ஆட்டத்தை காண  கலர்ஸ் தமிழ்,  ஜியோசினிமா மற்றும் ஸ்போர்ட்18 ஐ  டியூன் செய்யுங்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை அனைத்து கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் DTH தளங்கள் - சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO ஷ 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553) போன்ற அனைத்திலும் காணலாம்.

First published:

Tags: Cricket