ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ரீஸ் டாப்லே நிரூபித்துள்ளார்’ - சொல்கிறார் அனிருத்தா ஸ்ரீகாந்த்

‘சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ரீஸ் டாப்லே நிரூபித்துள்ளார்’ - சொல்கிறார் அனிருத்தா ஸ்ரீகாந்த்

ரீஸ் டாப்லே

ரீஸ் டாப்லே

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இறுதிக்கட்டத்தில் 7 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசியதுதான் இரு அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்கள் இழப்புக்கு 216ரன்கள் குவித்தது. குவிண்டன் டி காக் 31 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், ஹெய்ன்ரிச் கிளாசன் 19 பந்துகளில், 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 50 ரன்களும் விளாசினர்.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி 7 பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தது. இதில் 4 சிக்ஸர்களை ஹெய்ன்ரிச் கிளாசன் விளாசியிருந்தார். இதுவே அந்த அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க காரணமாக அமைந்தது. இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. எனினும் இயன் மோர்கன் (37 பந்துகளில், 64 ரன்கள்), டேன் விலாஸ் (30 பந்துகளில் 44 ரன்கள்) ஜோடி 61 பந்துகளில் 114 ரன்கள் விளாசி நம்பிகை கொடுத்தனர். ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் பார்ல் ராயல்ஸ் அணி ஆட்டத்தை 8 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் முடித்தது.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றியில் ரீஸ் டாப்லேவின் பந்து வீச்சும் முக்கிய பங்குவகித்தது. ஜாஸ் பட்லரை 2 ரன்களில் போல்டாக்கிய டாப்லே அதன் பின்னர் இறுதிப் பகுதியில் ஒரே ஓவரில் டேன் விலாஸ், இவான்ஸையும் வெளியேறிற்றினார்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அனிருத்தா ஸ்ரீகாந்த்  கூறும்போது, “ டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இறுதிக்கட்டத்தில் 7 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசியதுதான் இரு அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் பார்ல் ராயல்ஸ் தோல்வி அடைந்தது 27 ரன்கள் வித்தியாசத்தில்தான். பந்து வீச்சை பொறுத்தவரையில் ரீஸ் டாப்லேவின் செயல்திறனை குறிப்பிட வேண்டும். இங்கிலாந்து அணியின் பிரீமியர் பந்து வீச்சாளராக தான் இருந்து வருவதற்கான காரணத்தை நிரூபித்துள்ளார்.

பவர் பிளேவில் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றி டாப்லே, இறுதிப்பகுதியில் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தி அருமையாக செயல்பட்டார். காயம் காரணமாக டி 20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டு வந்து உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். இந்தத் தொடரில் அவர், அனைவரும் கவனிப்படக்கூடிய வீரராக இருப்பார். மோர்கன், டேன் விலாஸ் பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டதும் ஆட்டத்தில் திருப்பு முனையை கொண்டு வந்தது.

,இதேபோன்று பிரிட்டோரியஸ் தொடக்கத்தில் ஒரே ஓவரில் டேவிட் மில்லர் விஹான் லுபே ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் அங்கேயே பார்ல் ராயல்ஸ் அணி மட்டுப்படுத்தப்பட்டது போன்று தெரிந்தது. ஆனால் அதன் பின்னர் மோர்கன், விலாஸ் ஜோடி போராடினார்கள். இந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் தோல்வி அடைந்தாலும் போனஸ் புள்ளியை விட்டுக்கொடுக்காதது சற்று சிறப்பான விஷயம்தான்” என்றார்.

First published:

Tags: Cricket