இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே கைவிடப்பட்ட 5வது டி20 போட்டியின் போது,
மழை தாமதத்தின் போது இணையத்தில் ஒரு வீடியோ
வைரல் ஆனது., அதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் டக்அவுட் பகுதியில் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட கிரவுண்ட்ஸ்மேனை அதாவது மைதான ஊழியரை "அவமரியாதை" செய்தது வெளியாகி நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளானார்.
5வது டி20 போட்டியில் 3.3 ஓவர்களில் 28/2 என்று தொடக்க வீரர்களை லுங்கி இங்கிடி காலி செய்தார். இது ஒருபுறம் ரசிகர்களின் கோபத்தை கிளற, டக் அவுட்டில் கிரவுன்ட்ஸ்மேன் ஒருவர் ருதுராஜ் கெய்க்வாடை அணுகி செல்ஃபி எடுத்துக் கொள்ள பிரியப்பட்டார், ஆனால் அவரை தள்ளி போகுமாறு ருதுராஜ் கூறிய வீடியோ ரசிகர்களின் ருதுராஜ் மீதான கோபாவேசத்திற்குக் காரணமானது.
ரசிகர்கள் பலரும், தங்கள் சமூக ஊடக பக்கத்தில், ‘இப்படியா நடத்துவது?’, ’மிக மோசமான அவமரியாதையைச் செய்துள்ளார் ருதுராஜ் என்று சாடியுள்ளனர். ஒருவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கூட அருகில் வர வேண்டாம் என்று அவர் கூறியிருக்கலாம்.
இதோ சில ட்வீட்கள்:
பயோபபுள், கொரோனா காரணமாக இருந்தாலும் ஒருவரை இப்படி ட்ரீட் செய்யக் கூடாது என்றும் நெட்டிசன்கள் ட்வீட் செய்து ருதுராஜ் கெய்க்வாடுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.