ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய டி20 அணிக்கு இந்த 7 புது வீரர்கள் நிச்சயம் தேவை- மூத்த வீரர்களே.. கொஞ்சம் வழிவிடுங்க

இந்திய டி20 அணிக்கு இந்த 7 புது வீரர்கள் நிச்சயம் தேவை- மூத்த வீரர்களே.. கொஞ்சம் வழிவிடுங்க

ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர்

ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர்

ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு நாம் தேர்வு செய்யப்படுவோம் என்ற கனவுகளை கண்களில் ஏந்தி நிற்கும் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். நிச்சயமாக இந்த 7 வீரர்கள் இந்திய அணிக்குள் வர வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவு பொய்யாய் பழங்கதையாக முடிந்து போனது, பில்டிங்கு ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்று வடிவேலு சொல்வாரே அதுபோல் பில்ட்-அப் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்று சொல்லும்படியாக இந்திய அணி இன்று கடைசி போட்டி ஆறுதல் வெற்றியுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு ஓய்வு இல்லாத வகையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகள் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஐபிஎல் ஆடி களைத்துப் போன இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருக்கப் போகிறார். அணியின் தன்மையும் மாறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் யார்க்கர் நடராஜனை அணிக்குள் கொண்டு வருவது அவசியம். இடது கை பவுலர் அவசியம் தேவை.

டி.நடராஜன்

ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு நாம் தேர்வு செய்யப்படுவோம் என்ற கனவுகளை கண்களில் ஏந்தி நிற்கும் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். நிச்சயமாக இந்த 7 வீரர்கள் இந்திய அணிக்குள் வர வேண்டும். அவர்கள்: ஷுப்மன் கில், பிரிதிவி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், மயங்க் அகர்வால், ஆகியோர் நிச்சயம் வாய்ப்பளிக்கப்பட வேண்டிய வீரர்கள்.

அதே போல் மணிக்கு 153 கிமீ வேகம் வீசி ஆன்ரிச் நார்ட்யேவுக்குப் போட்டியாக விளங்கும் சன் ரைசர்ஸ் அணியின் காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக், ஐபிஎல் தொடரில் கலக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், கார்த்திக் தியாகி, ராகுல் திவேத்தியா போன்றோரையும் கொண்டு வரலாம், அதே போல் தேவ்தத் படிக்கல் ஆகியோரையும் பரிசீலிக்கலாம்.

உம்ரன் மாலிக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

2021 உலகக்கோப்பையிலேயே அனாவசியாமாக ஷிகர் தவானை உட்கார வைத்தனர், அவர் உண்மையில் தொடக்கத்தில் இடது வலது காம்பினேஷனில் பல பவுலர்களுக்கு தொல்லைக் கொடுத்துள்ளார். ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா போன்றோரையும் ரிசர்வ் வீரர்களாக அணியில் தேர்வு செய்து பார்க்கலாம். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எஸ். பரத், சஞ்சு சாம்சன் என்று ஏகப்பட்ட வீரர்கள் உள்ளனர், பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தை சோதித்துப் பார்க்கலாம். உண்மையில் இவர்களில் ஒரு 5 வீரர்களாவது அணியில் எடுக்கப்பட வேண்டும்.

கார்த்திக் தியாகி கொண்டாட்டம்

பயமற்ற கிரிக்கெட்டை ஆடும் ஷுப்மன் கில் (ட்ரெண்ட் போல்டை 2 ஸ்டெப் இறங்கி வந்து மைதானத்துக்கு வெளியே அடித்ததை மறக்க முடியுமா?) பிரிதிவி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர் இவர்கள் அவசியம் அணிக்குள் வர வேண்டும். பவுலிங்கில் 2021 ஐபிஎல் சீசனில் பர்ப்பிள் கேப்புக்கு சொந்தக் காரரான ஹர்ஷல் படேல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2ம் இடத்தில் ஆவேஷ் கான் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதே போல் சேத்தன் சக்காரியாவும் நல்ல ஆப்ஷன். அதிவேகம் வீசும் ஷிவம் மாவி, இவர்களையெல்லாம் எப்போது பார்ப்பது? எப்பப் பார்த்தாலும் ரோகித் சர்மா, விராட் கோலி என்று பார்த்துக் கொண்டிருந்தால் இந்த இளம் ரத்தங்களுக்கு எப்போதுதான் வாய்ப்பளிக்கப் போகிறது பிசிசிஐ?

Published by:Muthukumar
First published:

Tags: Shubman Gill, T20, T20 World Cup