ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனி படையின் சூப்பர் ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாடுக்கு இன்னொரு மகுடம்

தோனி படையின் சூப்பர் ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாடுக்கு இன்னொரு மகுடம்

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

காராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சற்று முன் வரை 76 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆடிவர, மகாராஷ்டிரா அணி 27 ஓவர்களில் 181/1 என்று வெற்றி நடைபோடுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் மகாராஷ்ட்ரா அணிக்குக் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாட்.

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் டி-யில் மகாராஷ்டிரா அணி மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர், கேரளா, உத்தராகண்ட், சண்டிகர் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் 20 வீரர்கள் கொண்ட மகாராஷ்டிரா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் திரிபாதி, இவர் சீனியர் என்றாலும் ருதுராஜுக்கு உதவியாக துணை கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மத்தியப் பிரதேசத்துடன் மகாராஷ்டிரா தன் முதல் போட்டியில் ஆடிவருகிறது.

மகாராஷ்டிரா அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன், ராகுல் திரிபாதி, யாஷ் நாகர், நவுஷஷ் ஷேக், அஜிம் காஜி, அன்கிட் பானி, ஷம்சுசமா காஜி, முகேஷ் சவுத்ரி, பிரதீப் தாதே, மனோஜ் இங்கலே, அக்‌ஷய் பல்கார், திவ்யங் இங்கனேகர். ஜக்தீஷ் சோப், ஸ்வப்னில் ஃபுல்பாகர், அவ்தூத், தந்தேகர், தரஞ்சித் சிங், தில்லான், சித்தேஷ் வீர், யாஷ் ஷிர்சாகர், பவன் ஷா, தன் ராஜ் பர்தேசி.

இன்று நடைபெறும் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேசம் முதலில் பெட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. ம.பி. வீரர்கள் ஷுபம் சர்மா 108 ரன்களையும் கேப்டன் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா 104 ரன்களையும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிவரும் மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சற்று முன் வரை 76 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆடிவர, மகாராஷ்டிரா அணி 27 ஓவர்களில் 181/1 என்று வெற்றி நடைபோடுகிறது. இந்தப் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

மற்றொரு போட்டியில் தமிழ்நாடு அணி மீண்டும் ஷாரூக்கான் 35 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் விளாச 290 ரன்களை குவித்துள்ளது.

First published:

Tags: Vijay hazare trophy