ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் - பவுலரை பதம் பார்த்த ருதுராஜ் கெய்க்வாட்

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் - பவுலரை பதம் பார்த்த ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

இந்த ஆட்டத்திற்கு பிறகு, ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் தொடரில் வீரர்கள் பல சாதனைகளை உருவாக்கி வருகிறார்கள். சென்ற வாரம் ஒரே போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் பல சாதனைகளை படைத்தார். அதே போல இன்று நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், மகாராஷ்ட்ரா அணி, உத்திர பிரதேச அணியை எதிர்கொண்டது. அஹமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மகாராஷ்ட்ரா கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், 159 பந்துகளில் 220 ரன்களை எடுத்தார்.

இதையும் படிக்க : 50 ஓவரில் 506 ரன்கள் குவித்த தமிழக அணி.. ஒரே போட்டியில் 9 சாதனைகளை முறியடித்த ஜெகதீசன் 

இந்த போட்டியில் 49ஆவது ஓவரை வீசிய ஷிவா சிங்கின் அனைத்து பந்துகளையும் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர்களுக்கு அடித்தார். முதல் நான்கு பந்துகளை சிக்ஸர்களுக்கு அடிக்க, ஷிவா சிங் வீசிய ஐந்தாவது பந்து நோ-பாலானது. அந்த பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார் ருதுராஜ் கெய்க்வாட். அந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அடித்ததன் மூலம், அந்த ஓவரில் அவர் 43 ரன்களை விளாசினார்.

48ஆவது ஓவர் வரை, 147 பந்துகளுக்கு 165 ரன்களை எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஓவருக்கு பின், 154 பந்துகளில் 207 ரன்களை எடுத்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் ருதுராஜ்.

மேலும், வெள்ளை பந்தாட்டத்தில் (White ball), ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் வீரரென்ற சாதனையை படைத்தார் ருதுராஜ் கெய்க்வாட். நியூசிலாந்து வீரர், லீ ஜெர்மன் ஒரு ஓவருக்கு 8 சிக்ஸர்கள் (All formats) அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ருதுராஜ். இதற்கு முன்னர், ஜிம்பாவே வீரரான எல்டன் சிகும்புரா 2013யில் ஒரே ஓவரில் 39 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

First published:

Tags: CSK, Vijay Hazare, Vijay hazare trophy