Home /News /sports /

ஐசிசி உயர்மட்ட கிரிக்கெட் நடுவர் ரூடி கர்ட்சன் கார் விபத்தில் மரணம்

ஐசிசி உயர்மட்ட கிரிக்கெட் நடுவர் ரூடி கர்ட்சன் கார் விபத்தில் மரணம்

கார் விபத்தில் மரணமடைந்த ரூடி கர்ட்சன்.

கார் விபத்தில் மரணமடைந்த ரூடி கர்ட்சன்.

18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி சுமார் 331 போட்டிகளில் நடுவராக இருந்த ஆகச்சிறந்த தென் ஆப்பிரிக்க நடுவர் ரூட் கர்ட்சன் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 73.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி சுமார் 331 போட்டிகளில் நடுவராக இருந்த ஆகச்சிறந்த தென் ஆப்பிரிக்க நடுவர் ரூட் கர்ட்சன் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 73.

    கேப்டவுனிலிருந்து ஈஸ்டர்ன் கேப்புக்கு காரில் வந்த போது விபத்தில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார் இந்த ஐசிசி உயர்மட்ட நடுவர் ரூடி கர்ட்சன்.

    ரூடி கர்ட்சனின் மகன் இந்தத் தகவலை உறுதி செய்தார், கால்ஃப் போட்டிக்குச் சென்ற ரூடி கர்ட்சன் வரும்போதுதான் மரணம் அடைந்துள்ளார். 2002 முதல் ஐசிசி உயர்மட்ட நடுவராக 331 சர்வதேசப் போட்டிகளில் நடுவர் பணியாற்றி அதிக போட்டிகளில் 2ம் இடத்தில் இருக்கும் ஆகச்சிறந்த நடுவர் ரூடி கர்ட்சன். இவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெறும்போது இவர்தான் நம்பர் 1, பிறகு பாகிஸ்தானின் அலீம் தார் 331 போட்டிகள் சாதனையைக் கடந்து தற்போது முதலிடத்தில் இருந்தார்.

    ரூடி கர்ட்சன், அலீம் தார், ஸ்டீவ் பக்னர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் நடுவர் பணியாற்றியவர்கள். 1992-93-ல் இந்தியா முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா சென்ற போது 43வது வயதில் முதன் முதலில் நடுவர் பணியாற்றியவர் ரூடி கர்ட்சன்.

    வீரர்களால் மதிக்கப்படும் மிகப்பெரிய நடுவர். 1999-ல் சிங்கப்பூரில் வெஸ்ட் இண்டீஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி ஒன்றை சூதாட்டக்காரர்கள் மாற்றியமைக்க இவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த போது அதை ரிப்போர்ட் செய்து லஞ்சத்தை மறுத்ததற்காக விருது பெற்றார். 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 3ம் நடுவராக இருந்த ரூடி கர்ட்சனுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது, இவருக்கு ஐசிசி அபராதமும் விதித்தது.

    2010-ல் இவர் ஓய்வு பெற்ற பிறகு Slow Death: Memoirs of a Cricket Umpire என்ற புத்தகத்தையும் எழுதினார் ரூடி கர்ட்சன். இவருக்கு ‘ஸ்லோ டெத்’ என்ற செல்லப்பெயர் உண்டு, ஏனெனில் அவுட் கொடுக்கும் போது மெதுவாக தன் இடது கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தும் பாணி பலரையும் இவருக்கு ஸ்லோ டெத் என்ற பெயரை சூட்ட காரணமானது.

    2011 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியில் நடுவர் பணியாற்றியதே கடைசி. ஆனாலும் கடைசி வரை உள்ளூரில் நடுவர் பணியாற்றியிருக்கிறார், பிட்ச்கள் அமைப்பதில் உதவி புரிந்துள்ளார். தனது ஆரம்ப நாட்களில் மிதவேகப்பந்து வீச்சாளராக ரூடி கர்ட்சன் டாப் டிவிஷன் கிளப் கிரிக்கெட்டை கிம்பர்லியில் ஆடியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC, South Africa, Umpire

    அடுத்த செய்தி