ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சியா?- பிசிசிஐ மறுப்பு

ரோகித் சர்மா

உலகக்கோப்பை டி20க்குப் பிறகு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக விராட் கோலி விலகுவார், ரோகித் சர்மா அவருக்குப் பதிலாக இந்த 2 வடிவங்களிலும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற செய்திகளை பிசிசிஐ மறுத்துள்ளது.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  ஐசிசி டி20 உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையில் வெல்லவில்லை எனில் ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று யோசனை இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட அதை பிசிசிஐ கடுமையாக மறுத்துள்ளது. அதாவது விராட் கோலியே குறைந்த ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டாலும் ரோகித் சர்மாவே நியமிக்கப்படலாம் என்றும் மற்றொரு தரப்பும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  குறைந்தது டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன, காரணம் ரோகித் சர்மாவின் ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இந்திய டி20 அணிக்காக கோலி இல்லாத போது ரோகித் சர்மா பிரமாதமாக சிலபல வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இலங்கையில் நடைபெற்ற நிதாகஸ் டிராபி ஒரு எடுத்துக் காட்டு. மேலும் கோலி தன் பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கு கேப்டன்சி சுமை இடையூறாக இருப்பதாகவும் கருதுவதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இந்தச் செய்திகளை மறுத்துள்ளார். “இவையெல்லாம் குறிப்புக் குப்பை செய்திகள். அப்படி எதுவும் நடக்கவும் இல்லை, திட்டமும் இல்லை. பிசிசிஐ ஒருநாளும் கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பது பற்றி கூட்டமும் நடத்தவில்லை, இதைப்பற்றி பேசவும் இல்லை. விராட் கோலிதான் அனைத்து வடிவத்துக்கும் கேப்டனாக இருப்பார்” என்றார்.

  பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி வெளியான செய்தியில் “விராட் கோலியே இந்த அறிவிப்பை வெளியிடுவார். பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார் கோலி, தன்னுடைய பழைய பார்மை மீட்க அவர் இந்த முடிவுக்கு வருவார் என்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்ற தன் பழைய நிலையை எட்டவே அவர் விரும்புகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

  Also Read: Virat Kohli| கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுகிறார்? : ரோகித் சர்மாவை நியமிக்க முடிவு?

  மேலும் பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகிகள் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்றும் இந்தியா நியூசிலாந்திடம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோல்வி அடைந்ததிலிருந்தே இந்த மாற்றம் சிந்திக்கப்பட்டு வருகிறது என்றும் விராட் கோலியின் அணித்தேர்வின் மீது பிசிசிஐ அதிருப்தி கொண்டு வருகிறது என்றும் அந்தச் செய்தி கூறியிருந்தது, இது பற்றி துமால் கூறும்போது, “இப்படி ஒரு மீட்டிங் நடக்கவே இல்லை” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: