ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரூ.40 லட்சம் என்பது சிறிய பாராட்டுச் சின்னம்; இந்திய U-19 அணியின் சாதனை விலைமதிப்பற்றது - கங்குலி 

ரூ.40 லட்சம் என்பது சிறிய பாராட்டுச் சின்னம்; இந்திய U-19 அணியின் சாதனை விலைமதிப்பற்றது - கங்குலி 

கங்குலி

கங்குலி

Sourav Ganguly BCCI: 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி மற்றும் செயலர் ஜெய் ஷா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி மற்றும் செயலர் ஜெய் ஷா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. வரலாறு படைத்த விராட் கோலி, உன் முக்த் சந்த் வரிசையில் இளம் புலி யாஷ் துல் இணைந்தார்.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதே போன்று அணி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

ஜெய் ஷா ட்விட்டர் பதிவு:

கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், துணை பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கோப்பையை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள்.

நாங்கள் அறிவித்துள்ள 40 லட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுச் சின்னம்தான்.., ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை..” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ICC world cup, Sourav Ganguly, Team India