ஆப்பு வைத்த பெங்களூரு... பிளே ஆஃப்-க்கு தகுதி பெறுமா ஹைதராபாத்

இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

ஆப்பு வைத்த பெங்களூரு... பிளே ஆஃப்-க்கு தகுதி பெறுமா ஹைதராபாத்
பெங்களூரு
  • News18
  • Last Updated: May 5, 2019, 8:30 AM IST
  • Share this:
பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டி பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பெங்களூரு அணி பந்து வீசியது. ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது.

176 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் தங்கள் கடைசி லீக் போட்டி என்பதால் அடித்து ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஒருகட்டத்தில் ஹெட்மியர், பந்துகளை சிக்சர்களாக விளாசினார். அவர் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 178 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.


பிளே ஆஃப்-க்கு முன்னேறாவிட்டாலும் ஆறுதல் வெற்றியை சுவைத்த பெங்களூரு அணியினர் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களிடம் இருந்து விடை பெற்றனர். பிளே ஆஃப்-க்கு தகுதி பெற போராடிய ஹைதராபாத் அணி பெங்களூருவிடம் வீழ்ந்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.Also watch

First published: May 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading