அதிரடி மாற்றங்களை அறிவித்த ஆர்.சி.பி..! ரசிகர்கள் உற்சாகம்

அதிரடி மாற்றங்களை அறிவித்த ஆர்.சி.பி..! ரசிகர்கள் உற்சாகம்
  • Share this:
ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டது கேள்வியை எழுப்பிய நிலையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி.பி அணியின் சமூகவலைதள பக்கங்களில் இருந்து பழைய பதிவுகள் அழிக்கப்பட்டு, புரொபைல் புகைப்படம் நீக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ஆர்.சி.பி அணி தனது லோகோவை மாற்றி வடிவமைத்துள்ளது. ஆர்.சி.பி-யின் புதிய லோகோவில் சிங்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த லோகாவை தனது சமூகவலைதள பக்கங்களில் புரொபைல் போட்டாவாகவும் வைத்துள்ளனர்.




இது குறித்து ஆர்.சி.பி அணியின் தலைவர் சஞ்சீவ் சூரிவாலா கூறுகையில், “லோகோவில் உள்ள கூறுகள் ஆர்.சி.பி அணியின் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் என்பது உறுதி. கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கொண்டாடும் வகையிலும், தைரியமாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்த லோகோ மாற்றம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்“ என்றுள்ளார்.



ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தை டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தமாகி உள்ளது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading