ஐ.பி.எல் அணிகளில் முதன்முறையாக பெங்களூரு அணியில் புதுமையான மாற்றம்!

ஐ.பி.எல் அணிகளில் முதன்முறையாக பெங்களூரு அணியில் புதுமையான மாற்றம்!
  • Share this:
ஐ.பி.எல் அணிகளில் பெங்களூரு அணி புதுமையான மாற்றத்தை நடைமுறைப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் 13-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் தங்களது அணிகள் வெற்றி பெற உரிமையாளர்கள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெண் ஊழியரை நியமித்துள்ளது. ஐ.பி.எல் அணிகளில் முதன்முறையாக பெண் ஊழியர் ஒருவர் இடம் பெற்றுள்ளது இந்த அணியில் தான்.


நவ்னிதா கவுதம் எனும் அவர் மசாஜ் நிபுணர் ஆவார். பெங்களூரு அணியின் வீரர்களின் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவார். நவ்னிதா நியமனம் குறித்து அணியின் உரிமையாளரான சஞ்சீவ் சூரிவாலா கூறுகையில், “இந்த வரலாற்று மிக்க மாற்றத்தில் இடம்பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அணியை சரியான பாதைக்கு அழைத்து செல்வதில் மற்றொரு சரியான மாற்றம் இது“ என்றார்.

இது தொடர்பாக நவ்னிதா கூறுகையில், “விளையாட்டு அரங்கில் பெண்களின் பங்காளிப்பு வெற்றியை தேடி தருகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கும். என்னுடைய திறமையை ஆர்.சி.பி கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது“ என்றும் கூறியுள்ளார்.

Also Watch
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading