சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை ஓரங்கட்டிய ராஸ் டெய்லர்!

#RossTaylor goes past #ViratKohli, #SachinTendulkar's records| நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஆண்ட்ரூவ் ஜோன்ஸ் ஆகியோரின் சாதனை டெய்லர் சமன் செய்துள்ளார். #NZvSL

Web Desk | news18
Updated: January 8, 2019, 10:32 PM IST
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை ஓரங்கட்டிய ராஸ் டெய்லர்!
நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதைகளையும் தட்டிச் சென்றார். (ICC)
Web Desk | news18
Updated: January 8, 2019, 10:32 PM IST
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

SL, New Zealand, நியூசிலாந்து, இலங்கை
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, தொடரை முழுவதுமாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. (BlackCaps)


இந்நிலையில், இரு அணிகள் மோதிய 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, தொடரை முழுவதுமாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்த போட்டியில் 137 ரன்கள் குவித்த ராய் டெய்லர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 20-வது சதத்தைப் பதிவு செய்தார்.

Ross Taylor, ராஸ் டெய்லர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ராஸ் டெய்லர் தனது 20-வது சதத்தைப் பதிவு செய்தார். (ICC)


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ‘கிவி’ (நியூசிலாந்து) என்ற பெருமையையும் அவர் பெற்றார். அத்துடன், தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார். கடைசி 10 இன்னிங்சில் அவர் அடித்த ரன்கள், 1, 59, 113, 10, 181*, 80, 86*, 54, 90, மற்றும் 137.

Ross Taylor, ராஸ் டெய்லர்
ராஸ் டெய்லர், தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
Loading...
நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஆண்ட்ரூவ் ஜோன்ஸ் ஆகியோரின் சாதனை டெய்லர் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி, மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தொடர்ந்து 5 முறை மட்டும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

1987-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட் தொடர்ந்து 9 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது.

வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!

Also Watch...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...