Home /News /sports /

ஓய்வு பெறுகிறார் நியூசிலாந்தின் ‘கோல்டன் மேன்’ ராஸ் டெய்லர்

ஓய்வு பெறுகிறார் நியூசிலாந்தின் ‘கோல்டன் மேன்’ ராஸ் டெய்லர்

கோல்டன் மொமெண்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற போது டெய்லர், வில்லியம்சன்

கோல்டன் மொமெண்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற போது டெய்லர், வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் வரவிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான உள்நாட்டு தொடரே தன் கடைசி தொடர் என்று அறிவித்துள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் வரவிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான உள்நாட்டு தொடரே தன் கடைசி தொடர் என்று அறிவித்துள்ளார்.

    37 வயதாகும் ராஸ் டெய்லர், இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்தின் அதிக ரன் எடுத்த வீரர் ராஸ் டெய்லர்தான்.

    மார்ச் 2006-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதன் முதலில் ஒருநாள் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார் ராஸ் டெய்லர். நவம்பர் 2007-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் கண்டார். உலக பேட்டர்களை நடுங்கச் செய்யும் பெர்த் பிட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 290 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.

    இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சமான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி ரன்களை இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த போது கேப்டன் கேன் வில்லியம்சனுடன் களத்தில் இருந்தார் ராஸ் டெய்லர். 2023 உலகக்கோப்பை வரை இருப்பேன் என்றார், ஆனால் திடீரென இப்போது வங்கதேச தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.



    ஓய்வு குறித்து ராஸ் டெய்லர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:



    டெஸ்ட் போட்டிகளில் 7584 ரன்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8,581 ரன்களையும் எடுத்துள்ள ராஸ் டெய்லர், ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களையும், அனைத்து வடிவங்களிலும் 40 சதங்களையும் எடுத்துள்ளார் ராஸ் டெய்லர். 102 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1909 ரன்களை எடுத்துள்ளார்.

    மொத்தமாக அனைத்து டி20 வடிவங்களிலும் 292 போட்டிகளில் 6429 ரன்களைக் குவித்துள்ளார். நல்ல பீல்டரான ராஸ் டெய்லர் டெஸ்ட்டில் 161 கேட்ச்களை எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 139 கேட்ச்களையும் டி20-யில் 46 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி